Comments System

header ads

மக்களுக்காகவே நான் அரசியல் களத்தில் இருக்கின்றேன், இருப்பேன்; தமீம் ஆப்தீன்


மக்களுக்கு சேவை செய்யக் கூடிய ஒருவனாகவே அட்டாளைச்சேனை பிரதேசசபையில் இருப்பேன் இல்லை என்றால் அதற்கான போராட்டங்களை முன்னெடுக்க தயங்க மாட்டேன், என மு.கா வேட்பாளர் தமீம் ஆப்தீன் தெரிவித்தார். 

அட்டாளைச்சேனை பிரதேசத்தின் அரபா வட்டாரத்திற்கான ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் வேட்பாளர் தமீம் ஆப்தீன் அவர்களை ஆதரித்து முன்னாள் மாகாண சுகாதார அமைச்சர் ALM நஷீரின் பிரதம பங்கேட்புடன் நேற்றிரவு AC பள்ளி முன்றலில் இடம்பெற்ற பிரச்சார கருத்தரங்கின் போதே வேட்பாளர் தமீம் ஆப்தீன் இவ்வாறு கூறினார். மேலும் அவர் உரையாற்றுகையில்,

கடந்த காலங்களில் எமது வட்டார மக்களை பெரிது அரசியல் ரீதியில் புறக்கணிப்புகளை திணித்து வந்திருக்கின்றார்கள். மு.கா வின் உருப்பினார்களாக இருந்து கொண்டு கட்சியின் சுக நலன்களை அனுபவித்துக் கொண்டு இருந்தவர்கள்தான் இன்று கட்சிக்கு வாக்களிக்க கூடாது என தடுத்து வருகின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ் இவர்களின் சுயநலம் இன்று முளையிலேயே தெரிந்துவிட்டது. இவற்றுக்கெல்லாம் பதிலடி கொடுத்து கட்சியை மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டியது அவசியமான ஒன்றாகிவிட்டது.

இன்ஷா அல்லாஹ் இந்த வட்டாரம் மு.கா வுக்காக உறுதியாக்கப்பட்ட வட்டாரம் வேறு யாரும் இங்கு கைபோட முடியாது. பசப்பு வார்த்தைகளால் நம்மமை ஏமாற்ற முடியாது என்பதை நாம் உறுதியாக தேர்தல் முடிவின் மூலம் காட்டுவோம்.  

மு.கா வுக்காக உயிரை தியாகம் செய்யக்கூடிய போராளிகள் நிறைந்த வட்டரம் இது மக்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு தேவையானதை பிரதேச சபையின் அதிகாரத்தைக்கொண்டு செயல்படுத்தவே நாம் இக் களத்தில் குதித்துள்ளோம். இன்ஷா அல்லா இவ்வாட்டாரத்தில் எனது வெற்றி என்பது நம் அனைவரினதும் வெற்றி. என கூறினார். 


Post a Comment

0 Comments