எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு பலமாக இறங்கும்: மாவை சேனாதிராசா! - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, December 3, 2017

எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு பலமாக இறங்கும்: மாவை சேனாதிராசா!தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பலமான அணியாக களமிறங்குமென தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவது மற்றும் ஆளணிகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் இன்று மாலை 3 மணிமுதல் இரவு 9 மணி வரை சுமார் 5 மணித்தியாலயங்களாக கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் துரைராஜசிங்கம் மற்றும் ரெலோ கட்சியின் நா.ஸ்ரீகாந்தா, வினோநோதாரலிங்கம், விந்தன் கனகரட்ணம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா, உட்பட பலர்  கலந்துகொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலின் போது கருத்துத்தெரிவித்த மாவை சேனாதிராசா,
"தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து ஆராயப்பட்டன. அதனடிப்படையில், 80 சதவீதமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நடைபெறவுள்ள தேர்தலில் 3 கட்சிகளிற்குள்ளும் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஒன்றுபட்டு திரட்டுவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இன்னும் ஓரிரு விடயங்கள் ஆராயப்பட வேண்டியிருப்பதனால், அந்த விடயங்களையும் தீர்மானித்த பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை பகிரங்கமாக அறிவிப்போம்" என்றார்.
இதேவேளை,
"ஜனநாயக போராளிகள் கட்சி உட்பட எம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஏனைய இயக்கங்களுடனும் கலந்துரையாட வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களுடனும் கலந்துரையாடிய பின்னர் எதிர்வரும் 05ஆம் திகதி இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும். முக்கியமாக பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் பூரணப்படுத்தப்பட வேண்டியிருப்பதனால், மூன்று கட்சி சார்ந்த உறுப்பினர்களும் உரிய கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages