Comments System

header ads

அமெரிக்க ஜனாதிபதியை தீர்மானிப்பது ரஷ்யாவா ????

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் ஃபிளினின் செயற்பாடுகளை நியாயப்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவுடன் இரகசியத் தொடர்புகளை பேணிய விவகாரத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட மைக்கல் ஃபிளின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழக்கத் தயார் எனவும் கூறியிருந்தார்
இந்த நிலையில் மாற்றத்திற்கான தனது அணியில் இருந்த உறுப்பினர் என்ற வகையில் மைக்கல் ஃபிளின் மேற்கொண்ட நடவடிக்கை சட்டரீதியானது என டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
மைக்கல் ஃபிளினிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என தனது டுவிட்டர் பதிவில் உள்ளார் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடுகள் குறித்து விசாரணை செய்துவரும் ரொபேர்ட் முல்லரின் விசாரணைகளுக்கு மைக்கல் ஃ பிளின் ஒத்துழைப்பு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments