வாழைச்சேனை மக்கள் அமீரலியிடம் வேண்டுகோள்; அமீரலி மக்களுக்கு அழைப்பு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, December 3, 2017

வாழைச்சேனை மக்கள் அமீரலியிடம் வேண்டுகோள்; அமீரலி மக்களுக்கு அழைப்புஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்


!!.(வீடியோ).,பிரதேச சபை தேர்தலில் எமது வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும். வாழைச்சேனை மக்களிடம் அமீர் அலி பகிரங்க வேண்டுகோள்.!!
*********************************** 
வாழைசேனை மக்களின் அல்லது வை.எம்.எம்.ஏ அமைப்பின் வேண்டுதல்களை ஒரு பொழுது மறுத்த சந்தர்ப்பங்கள் கிடையாது. எதிர்காலத்தில் வாழைச்சேனை மக்கள் என்னிடம் வைக்கின்ற வேண்டுகோள்களை நிறை வேற்றிக்கொள்வதற்கான சூழலை எனக்கு வாழைச்சேனையில் அமைத்து தர வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன்.


அப்பொழுது என்னால் உங்களுடைய வேண்டுதல்களை படிப்படியாக நிறை வேற்றித்தர முடியும் என்ற வாக்குறுதியையும் தருகின்றேன்.
அதே போன்று நாங்கள் களமிறக்குகின்ற வேட்பாளர்களை வெற்றியடைய செய்து தரவோம் என்ற வாக்குறுதியினை வை.எம்.எம்.ஏ அமைப்பினர் எனக்கு தருவதோடு, நாம் களமிறக்குகின்ற வேட்பாளர்களுக்கு வாழைச்சேனை மக்கள் ஒருமித்து வக்களிக்க வேண்டும் என்ற திரைக்கு பின்னால் சொல்லப்படுவது போன்ற பகிரங்க வேண்டுகோளானது 03.12.2017 நேற்று ஞாயிற்று கிழமை வாழைச்சேனை அந்/நூர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சரும் கல்குடாவின் அரசியல் தலைமையுமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினால் வாழைச்சேனை மக்களிடன் முன்வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேசத்தில் அரசியலில் முக்கிய புள்ளியாகவும், 2008ம் ஆண்டைய கிழக்கு மாகாண சபை தேர்தலில் பிரதி அமைச்சர் அமீர் அலியின் பங்காளியாக தேர்தலில் குதித்து அதிகப்படியான வாக்குளையும் பெற்று மாகாண சபை உறுப்பினரான ஜவாஹிர் சாலிஹ் மீண்டும் அமீர் அலியுடன் கைகோர்த்து எதிர்கால அரசியலிலும், வருகின்ற பிரதேச சபை தேர்தலிலும் அரசியல் காய் நகர்த்தல்களை செய்யக்கூடிய சமிக்கையினை வாழைச்சேனை வை.எம்.எம்.ஏ அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பட்டிருந்த அன்னூர் முன்பள்ளி மாணவர் வெளியேற்று விழாவான குறித்த நிகழ்வில் அவதானிக்க கூடிய முக்கிய விடயமாக பார்க்கப்பட்டது.

பிரதி அமைச்சர் அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்ட குறித்த நிகழ்வில் விஷேட அதிதிகளாகவும் ,கெளரவ அதிதிகளாவும் வலய கல்வி பணிப்பாளர், அதிபர்கள், வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள முக்கிய கல்விமான்கள் கலந்து சிறப்பித்ததோடு, அரசியல் நடத்துனர்கள், சமூக சிந்தனையாளர்கள், வர்த்தகர்கள், பெற்றோர்கள் என பல எண்ணிக்கையானோர் சமூகமளித்திருந்தமையும் இன்னுமொரு முக்கிய விடயமாக பார்க்க்கப்பட்டது.
குறித்த நிகழ்வின் சுருக்கமான காணொளியும், பிரதி அமைச்சர் அமீர் அலி ஆற்றிய உரையும் எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages