Breaking News

நளீபா டீச்சர் ஓய்வு பெறுகிறார்



ஒலுவில் நிருபர்
29வருட ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு
இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிப்பிட்டிய கல்வி வலயத்திற்குற்பட்ட அஸ்ஸலாம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சமயப் (இஸ்லாம்) பாட ஆசிரியராக சேவையாற்றிய திருமதி கே.எம். நளீபா ஆசிரியை தனது 29வருட கால ஆசிரியர் சேவையாற்றி 2017.03.20ம் திகதி ஓய்வு பெற்றார்.
இவர் திரு. ஏ.எல்.எம். காலித் மற்றும் திருமதி ஏ.சி. நபீசா உம்மா ஆகியோரின் ஐந்தாவது புதல்வியாகப் பிறந்து திருமதி கே.எம். நளீபா ஆசிரியை அவர்கள் ஆரம்பக் கல்வியை இறக்குவானை அஸ்ஸலாம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றார். 
1978ம் ஆண்டு நடைபெற்ற தரம் - 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தார். அது பாடசாலை வரலாற்றில் இரண்டாவது இடத்தைப் பெற்றது வரலாற்றுச் சாதனையாகும். தொடர்ந்து உயர் கல்வியை தர்ஹா நகர் பெண்கள் மத்திய கல்லூரியில் கற்றார், கல்வி கற்கும் காலத்திலேயே மாணவர் தலைவர் விளையாட்டுக்குழுத் தலைவர், மாணவர் விடுதி தலைவி பேன்ற பல தலைமைத்துப் பன்புகளை தன்னிடத்திலேயே வெளிக்காட்டி ஆளுமையின் விதையாக விளங்கிளார். 
இவர் 1988ம் ஆண்டு பெருந்தோட்ட ஆசிரியர் நியமனத்தில் லங்காபேரி தமிழ் வித்தியாலயத்தில் நியமன் பெற்றார் தனது ஆசிரியர் பயிற்சியை தர்ஹா நகர் ஆசரியர் பயிற்சிக் கல்லூரியில் நிறைவு செய்து 1993ம் அண்டு எக்பத் தமிழ் வித்தியாலயத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியராக கடமையாற்றினார். 1994ம் ஆண்டு இடமாற்றம்பெற்று தமது சொந்து ஊரான இறக்குவானை அஸ்ஸலாம் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வந்த இவர் தனது சேவைக்காலம் நிறைவடையும் மட்டும் இப்பாடசாலையில் கடமையாற்றி மாணவர்களின் தனிப்பட்ட அனைத்து விதமான பிரச்சினைகளையும் கையான்டு தீர்த்து வைப்பதில் முன்னின்று செயற்பட்டவர். 
மேலும் இவரின் ஆசிரியர்துவப் பண்பு பாடசாலையில் மேலோங்கியே கணப்பட்டது. என்பதை அவரது சேவைக்கால பணியினூடாக அறியலாம். சுயமாக முன்வந்து பல பொறுப்புக்களைப் பெற்று அதனை செவ்வனே முடிக்கக்கூடியவராக திகழ்ந்தார். தனது அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்டு சகல ஆசிரியர்களுக்கும் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி பாடசாலையின் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதில் பெரும் பங்களிப்பை வழங்கினார். 
பாடசாலையில் நடக்கின்ற அனைத்து இணைப்பாடவிதான செயற்பாடுகளில் தனது முழு ஒத்துளைப்பைனையும் பங்களிப்பினையும் வழங்குவதுடன் விஷேடமாக மீலாத் தின போட்டிகளுக்கு பொறுப்பாசிரியராகவும் இருந்து தேசிய மட்டத்தில் பல வெற்றிகளை ஈட்டிக் கொடுத்து பாடசாலைக்கு நற்பெயரை தேடிக் கொடுப்பதில் பெரும் பங்காற்றினார். இவரின் ஓய்வு பாடசாலையில் தவிர்க்க முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.
இவருக்கான சேவை நலன் பாராட்டு விழா எதிர்வரும் 2017.12.05 செவ்வயாக் கிழமை பாடசாலையின் ஆசிரியர் நலன்புசிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலினை ஆசிரியர் நலன்புரிச் சங்கச் செயலாளர் எம்.எஸ். சத்தார் வழங்கினார்.
ஒலுவில் நிருபர் - அமீர் 0772984519

No comments