Breaking News

உள்ளுராட்சி சபைகளில் பெண்க ளுக்கான பிரத்தியோக இலக்கம், சேவை("CALL US SISTER") வேண்டும் ; ஏ.எல்.தவம் மு.மா.ச.உ



அக்கரைப்பற்று மாநகர சபையில் பெண்களுக்கான விசேட தொலைபேசி இலக்கம் - "CALL US SISTER"

நேற்று மாநகர சபை வீதியூடாக செல்லும் போது மாநகர சபையிலிருந்து வெளியிறங்கி வந்த ஒரு சகோதரி எனது வாகனத்தை நிறுத்த சொன்னார். அவர் எனக்குப் பரீட்சியமான சகோதரிதான். அவர் காலையில் நேரகாலத்தோடு தனது ஒரு கரும நிமிர்த்தம் மாநகர சபைக்கு வந்ததாகவும் - இப்போது நண்பகல் ஆகியும் தனது வேலை முடியாமல் திரும்புவதாகவும் - இப்படி மூன்று நாட்கள் அலைந்துள்ளதாகவும் - இப்பவும் தனது வேலை எப்போது முடியும் என்று தெரியாமல் திரும்புவதாகவும் கூறினார். 

இதையும் விடக் காத்திருந்தால் சாப்பாடு சமைக்க முடியாமல் போய்விடும். பிள்ளைகள் பாடசாலையில் இருந்து வரும் நேரம் அவர்கள் தேடுவார்கள் ஒரு பக்கம் எனக் கூறிக் கவலைப்பட்டார். இந்த மாநகர சபையில் உள்ளவர்களை மாற்ற இயலாதா தம்பி இப்படி அலைக்கழிக்க வைக்காங்க. என்னைப்போல் எத்தனை பெண்கள் இப்படி வந்து வேலை முடிக்கப்படாமல் அலைவார்கள்? இதற்கொரு வழி பண்ணுங்கோ மணி என்று கூறினார். அவருக்கு ஆறுதல் சொல்லி, மீண்டும் நீங்கள் இங்கு வரும்போது என்னிடம் சொல்லுங்கள் நான் உரியவர்களிடம் பேசி முடித்துத் தரச்செய்கிறேன் எனக் கூறி அனுப்பி வைத்தேன்.

அதற்குப் பின்னர், இப்படிப்பட்ட தாய்மார்கள் சகோதரிகளின் கஷ்டங்களை நீக்க என்ன வழி செய்யலாம் என்று சிந்தித்த போது, எனக்கு ஒரு ஐடியா வந்தது. பெண்கள் இவ்வாறான அலைச்சல்களிலிருந்து தவிர்ந்து கொள்ள, அவர்கள் வீட்டிலிருந்தவாறு மாநகர சபையில் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற, தங்களுடைய தேவைகளை நிவர்த்திக்க பெண்களுக்கான விசேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்யலாம். அதற்கு CALL US SISTER எனப் பெயரிடலாம்.

மாநகர சபையின் பெண் உத்தியோகத்தர்களை இவ்விலக்கத்திற்கு வரும் அழைப்புக்களுக்கு பதிலளிக்கவும், அழைப்பவர்களுக்கான கரும இலக்கம் கொடுக்கப்பட்டு (job number), அவை பற்றிய விடயங்கள் கையாளப்படவும், தேவைகள் நிவர்த்திக்கப்படவும் செய்யலாம்.அதனூடாக தாய்மார்கள் சகோதரிகளின் வீணான அலைச்சல், போக்குவரத்து செலவு போன்றவற்றைத் தவிர்க்கலாம்.இத்தோடு தேவைப்படுமிடத்து நடமாடும் சேவை அலகு ஒன்றையும் ஆரம்பித்து - தாய்மார்கள் சகோதரிகளின் காலடிக்குச் சென்று அவர்களின் சிறு சிறு கருமங்களை முடித்துக்கொடுக்கவும் செய்யலாம். 

இன்ஷா அல்லாஹ் எமது அணியின் கையில் அக்கரைப்பற்று மாநகர மற்றும் பிரதேச சபைகள் கிடைக்கப்பெற்றால் - பெண்களுக்கான விசேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்வோம். அத்தோடு நடமாடும் சேவை அலகையும் ஆரம்பிப்போம்.

- எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன் -

No comments