அபிவிருத்திகள் எல்லைப்புற பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் - மு.மா.ச.உ ஷிப்லி பாறூக் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

STAY WITH US

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 21, 2017

அபிவிருத்திகள் எல்லைப்புற பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் - மு.மா.ச.உ ஷிப்லி பாறூக்

 கர்பலா பிரதேசமானது சுமார் முப்பது வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றினைக் கொண்ட எல்லைக் கிராமாகும். கடந்த யுத்த காலங்களின் போது எமது பிரதேசங்களுக்கு பாதுகாப்பு அரண்களாக இத்தகைய எல்லைக் கிராமங்களே அமைந்திருந்தன. அதன் காரணமாக பல்வேறு பாதிப்புகளையும் இத்தகைய பிரதேசங்கள் சந்தித்திருந்தன என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் 2017ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கர்பலா ஸ்டார் சமூக சேவை அமைப்பிற்கான ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2017.11.19ஆந்திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...
இருப்பினும் இப்பிரதேசமானது தற்போதுவரை பல்வேறு குறைபாடுகளுடன்கூடிய பின்தங்கிய பிரதேசமாகவே காணப்படுகின்றது. ஆகவே இவ்வாறான பிரதேசங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி முன்னேற்ற வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.
அந்தவகையில் எங்களின் ஒவ்வொரு அபிவிருத்தி செயற்பாடுகளிலும் இத்தகைய எல்லைப் பிரதேசங்கள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தி செயற்பட்டு வருகின்றோம்.
குறிப்பாக இத்தகைய பிரதேசங்களை மையப்படுத்தி இயங்கக் கூடிய சமூக சேவை அமைப்புகளை வலுப்படுத்துவதனூடாக இவ்வாறான பிரதேசங்களின் அபிவிருத்தியினை முன்கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
அந்த வகையில் இவ் இளைஞர் அமைப்பினர் விடுத்த வேண்டுகோளிற்கு அமைவாக இன்று இவ் ஒலிபெருக்கு சாதனங்களை வழங்கியுள்ளதோடு எதிர்காலத்திலும் இவ்வாறான பிரதேச அமைப்புகளை மையப்படுத்தி பல்வேறு அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம் என தனது உரையில் பொறியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here