முஸ்லீம் தனியார் சட்டம் கைவிடப்படுகிறதா ? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 23, 2017

முஸ்லீம் தனியார் சட்டம் கைவிடப்படுகிறதா ?


-நன்றி மீள்பார்வை -
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை முன்மொழிவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடைய ஆட்சிக் காலத்தில் நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால் நியமிக்கப்பட்ட நீதியரசர் ஸலீம் மர்சூப் தலைமையிலான ஆணைக்குழு எட்டு வருடங்களாகியும் தமது அறிக்கையினை முன்வைக்காத நிலையில், முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த ஏற்பாடுகள் தொடர்ந்தும் தாமதமடைந்து வருகின்றன.
நீதியரசர் ஸலீம் மர்சூப் தலைமையிலான குழுவினர் கடந்த 07 வருடங்களாக இந்தப் பணியில் எந்த முன்னேற்றமும் காட்டாத நிலையில் இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவில் அமைச்சர்களான கபீர் ஹாஷிம், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், பைஸர் முஸ்தபா, எம்.எச்.எம்.ஹலீம், சந்த்ராணி பண்டார, டாக். சுதர்ஷனீ பெர்னான்டோபுள்ளே ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். 07 வருடங்களாகக் கலந்துரையாடியும் இவர்களால் (ஸலீம் மர்சூப் தலைமையிலான குழு) முன்மொழிவொன்றைச் சமர்ப்பிக்க முடியாமையே இந்த அமைச்சரவை உப குழுவை அமைப்பதற்கு தன்னைத் தூண்டியது என அப்போதைய நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
இந்தக் குழு நியமிக்கப்பட்டதன் பின்னர் நீதியரசர் ஸலீம் மர்சூப் தலைமையிலான குழுவினர் துரிதமாய்ச் செயற்பட்டனர். அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுடன் உடன்பாடுகளை எட்டுவதில் உள்ள சில தாமதங்கள், நளீமியா இஸ்லாமிய அறிஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்வதற்கான அவகாசங்கள் என பல்வேறு காரணங்களால் இறுதி அறிக்கை வெளிவருவது தாமதமாகின. பின்னர் குறித்த விடயங்கள் ஒவ்வொன்று தொடர்பிலும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், பல விடயங்களில் உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் அறிக்கை விரைவில் வெளிவரும் என்றும் செய்திகள் வெளிவந்தன. இறுதியாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு திகதியும் குறிக்கப்பட்டு, குறித்த தினத்தில் அறிக்கை வெளிவரும் எனச் சொல்லப்பட்ட போதும் இதுவரையும் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
இடைப்பட்ட ஒரு வருட காலப்பிரிவில் நாட்டுக்கான புதிய யாப்பு, தேர்தல் முறை தொடர்பான சட்டம், எல்லை நிர்ணயம், வட்டாரப் பிரிப்பு என பாரிய பல முயற்சிகள் நடந்து முடிந்துள்ள போதும், முஸ்லிம் தனியார் சட்டத்தின் விவாக, விவாக ரத்துச் சட்டத்தையேனும் திருத்துவதற்கான முன்மொழிவுகளை முன்வைப்பதற்கு எட்டு வருடங்களாகியும் குறித்த குழுவினரால் முடியாமல் போயிருக்கிறது.
அறிக்கையை அவசரமாக வெளியிடுமாறு முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தச் செயல் முன்னணி (MPLRAG) உட்பட பல அமைப்புக்களும் தனிநபர்களும் விடுத்த வேண்டுகோள்களின் பின்னரும் அறிக்கை வெளிவராத நிலையில், முஸ்லிம் தனியார் சட்ட திருத்த முன்மொழிவை முன்வைப்பதற்கான குழுவின் தலைவராக வேறொருவரை நியமிப்பது தொடர்பாக பேசப்பட்டு வருவதாகவும், பெரும்பாலும் ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் இதற்கென நியமிக்கப்படலாமென்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages