Comments System

header ads

காலி ஜிந்தோட்டைக்கு ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளில் போலீஸ் - விஷேட அதிரடிப்படை பாதுகாப்பு



காலி ஜிந்தோட்டை பகுதிகளுக்கு ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளில்  போலீஸ் - விஷேட அதிரடிப்படை பாதுகாப்பு 

காலி ஜிந்தோட்டை பகுதிகளில் முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வன்செயல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு அப்பாவி முஸ்லீம்களை பாதுகாக்குமாறு பிரதிப்பொலிஸ் மா அதிபரிடம் விடுக்கப்பட்ட வேண்டு கோளை தொடர்ந்து  சிரேஸ்ட்ட போலீஸ் அத்தியட்சகர்  கினிகே தலைமையிலான அணியினர் தற்போது பாதுகாப்பினை வழங்கி வருவதாக பா.உ கௌரவ மன்சூர் அவர்கள் இப்போது தெரிவித்துள்ளார். 

அனைத்து முஸ்லீம்களும் அமைதியாக பிராத்தனைகளில் ஈடுபடுமாறும், வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் வேண்டிக்கொள்ளப் படுகின்றனர். அதேவேளை சற்று முன் இரண்டு வீடுகள் தீககிரையாக்கப்பட்டுள்ளதாகவும் 50 வீடுகள் உடைக்கப்படுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments