Breaking News

அக்கரைப்பற்று மக்களின் உணர்வு மிக்க போராட்டம்



அக்கரைப்பற்று வட்டமடு விவசாயிகளின் காணிகளை மீட்பதற்கான போராட்டம் இப்போது மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அரசியல் ரீதியல் முஸ்லீம்களுக்கெதிராக இடம்பெற்ற முன்னாள் ஜனத்திபதியின் காலத்திலேயே இவ்வக்கிரமம் இடம்பெற்றிருந்தது. எனினும் நல்லாட்சியிலும் இவ்வநீதி தொடர்வதே கவலைக்குரியதாகும்.

அக்கரைப்பற்றில் முஸ்லீம்களின் காலங்காலமாக செய்யப்பட்டு வந்த வயல்காணிகளை அரச காணிகளாகவும், வன இலாகா காணிகளாகவும், வன ஜீவராசிகளுக்குரிய காணிகளாகவும் பிரகடனம் செய்து அவற்றை முஸ்லீம்களை விட்டும் பறித்தெடுத்த சதிக்கு எதிராக விவசாயிகளின் தலைமையிலான மண் மீட்புப் போராட்டம் இப்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

கடைகள் யாவும் மூடப்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையிலேயே இப்போது ஹர்த்தால் இடம்பெறுகிறது. பொது மக்களின் பூரண ஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என்பது சிறப்பம்சமாகும்






















அதேவேளை அரசியல் ரீதியில் நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தையும் மக்கள் பறிகொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

No comments