Comments System

header ads

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடரும் அபாயம்



நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கடற்பகுதியிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்றும்  வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.
குறிப்பாக மேற்கு, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென்மாகாணங்களில் சுமார் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலமான காற்று வீசும் எனவும் அறிவித்துள்ளது. .
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காலைவேளைகளில் பனிமூட்டமான காலநிலை காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Post a Comment

0 Comments