Comments System

header ads

காலி ஜிந்தோட்டையில் இப்போது நடப்பது என்ன ? அதிரடி ரிப்போர்ட்


-அய்யாஸ்-
இன்று இரவு எட்டரை மணியளவில் ஜிந்தோட்டையை அண்மித்த பகுதியொன்றில்  இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பங்கு கொண்ட வர்கள்   லாரி ஒன்றில் வந்திறங்கியே இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜிந்தோட்டையில் இருக்கும் மக்கள் தெரிவித்துள்ளார். 

அவ்வீதியினால் பயணம் செய்த முஸ்லீம்கள் மீதும் அவர்கள் உடைமைகள் வீடுகள் மீதும் வந்திரங்கியோர் தாக்குதல்களை நடாத்தியதுடன் தொடர்ச்சியாக முஸ்லீம் பிரதேசங்களில் ஊடுருவி தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதன் பின்னர் போலீசார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் தாக்குதல்கள் ஆங்காங்கே தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் மக்கள் அவதானமாகவும், பாதுகாப்பான இடங்களில் குழுமி இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மு.கா தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உட்பட அரசியல் வாதிகள் பலரும் ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன அவர்களுடன் பேசி ஜிந்தோட்டை பிரதேசத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது. 

Post a Comment

0 Comments