Header Ads

Breaking News

இளம் தாய் பரிதாப மரணம்; ஒலுவில் சோகத்தில்



-ஒலுவில் நிருபர் அமீர் 0772984519-

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக வீதியில் இன்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற மோட்டார்   பைசிக்கள் விபத்தில் ஐந்து பிள்ளைகளின் தாய் ஸ்தலத்தியேயே மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது இன்று மாலை (23.11.2017) வியாழக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழக வீதியின் ஊடாக மாமியும் மருமகனும்  பயணம் செய்து கொண்டிருந்த போது மோட்டர் பைசிக்கள்  விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பின் ஆசனத்தில் இருந்து பயணித்த மாமியார் தூக்கி வீசப்பட்டு பலியாகியுள்ளார்.

விபத்துக்குள்ளானவரை ஒலுவில் மாவட்ட வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் கொண்டு செல்லப்பட்டதும் இவர்; ஸ்தலத்திலேயே மரணமடைந்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரம்  தெரிவித்துள்ளது.

மரணமடைந்தவர் ஒலுவில் முதலாம் பிரிவு சதாம் வீதியைச்சேர்ந்த முஹம்மது ஹனிபா அமீனா (35)  இவரின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிகின்றார் மூன்று பெண் பிள்ளைகளும் இரண்டு ஆண்  பிள்ளைகளும்  உள்ளனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர் எந்த வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.இவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

No comments