Comments System

header ads

பதவியை இராஜினாமா செய்கின்றார் பிரபா கணேசன்



வன்னி மாவட்டத்திற்கான ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்ட பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.
ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு இன்று மாலை வழங்கிய நேர்காணலில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி இந்த பதவிக்கு முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அதிரடி முடிவை அவர் அறிவித்திருக்கின்றார்.
தனக்கு வழங்கப்பட்ட பதவி அரசியல் ரீதியாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்ற பிரபா கணேசன், அப்பதவியை தனக்கு வழங்கியிருந்தாலும், அதனூடாக பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் சிறிதளவேனும்கூட பணிகளை செய்வதற்காக தனக்கு இன்றுவரை வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

0 Comments