அவசரமாக மஹிந்த குடும்பத்தில் யாரும் கைது செய்யப்படலாம் ; பந்துல எம்.பி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

STAY WITH US

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 21, 2017

அவசரமாக மஹிந்த குடும்பத்தில் யாரும் கைது செய்யப்படலாம் ; பந்துல எம்.பி



மத்திய வங்கியின் பிணை முறி ஊழல் விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் விசாரணை செய்யப்பட்டதை மறைப்பதற்காக மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தில் எவரையேனும் கைது செய்யும் வாய்ப்பு உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரை கைது செய்து பிணைமுறி ஊழல் விவகாரத்தையே மூடி மறைக்க நல்லாட்சி அரசாங்கம் முற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். 
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிட்ட பந்துல குணாவர்த்தன, பிணை முறி ஊழல் விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
பிணைமுறி ஊழல் விவகாரம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது. அவ்வாறு கையளிக்கப்பட்ட அறிக்கையின் பிரதியொன்றை ஜனாதிபதி சபாநாயகருக்கு அனுப்ப வேண்டும் எனவும் கூறிய பந்துல குணவர்த்தன, அறிக்கையின் பிரகாரம் குற்றவாளிகளுக்கு தன்டனை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
பிணைமுறி ஊழல் விவகாரம் தற்போது மக்கள் மத்தியில் அதிகளவு பேசப்படுவதால் அதனை திசைதிருப்ப பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாஜ ராஜபக்ச அல்லது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகிய இருவரில் ஒருவரை கைது செய்ய திட்டமிடப்படுவதாக பந்துல குணவர்த்தன அந்த கலந்துரையாடலில் மேலும் கூறினார்.
கோதபாஜ ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படலாம் என கொழும்பில் இன்று வெளியான சிங்கள நாளேடு ஒன்றில் செய்தி பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here