வடமாகாண சபை பாராளுமன்றத்தை உதாசீனம் செய்கின்றது - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

STAY WITH US

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 23, 2017

வடமாகாண சபை பாராளுமன்றத்தை உதாசீனம் செய்கின்றதுஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திலிருந்து தாங்கள் விடுக்கின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வடமாகாண சபை தவறிவருவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறையிட்ட அவர், ஸ்ரீலங்காவிற்குள் மாகாண சபைகளில் ஒன்றாக செயற்படும் வடமாகாண சபை, ஒற்றையாட்சியை மறந்துவிட்டு தனிநாடு என்ற உணர்வில் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்றைய தினம் காலை 9.30 அளவில் கூடியது.
வாய்மொழி விடைக்கான கேள்வி நேரத்தின்போது சபையில் எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதயசாந்த குணசேகர, வவுனியா மாவட்டத்தில் இருக்கின்ற நீர்ப்பாசனக் குளங்களின் எண்ணிக்கை, பயிர் நிலங்களின் எண்ணிக்கை போன்ற விடயங்களை கேள்வியாக முன்வைத்தார்.
விவசாய அமைச்சர் சபையில் இருக்காத படியினால் சபை முதல்வரும், அமைச்சருமான கயந்த கருணாதிலக, உரிய பதில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதால் இதற்கான கால அவகாசத்தை கோரியிருந்தார்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதயசாந்த குணசேகர, மாகாண சபைகளில் ஏதாகிலும் கேள்விகளை முன்வைத்தால் அதே தினத்தில் அதற்கான பதில் வழங்கப்படுகின்றது. ஆனால் நாடாளுமன்றத்தில் இருந்து கேள்விகளை வடமாகாண சபைக்கு அனுப்பி வைக்கின்ற சந்தர்ப்பத்தில் அதற்கான பதிலை அளிப்பதற்கு வடமாகாண சபை தவறிவருகின்றது. ஒற்றையாட்சி நிலவுகின்ற இந்த நாட்டில் புறம்பான அல்லது தனியான நாடாக வடமாகாண சபை இயங்குகின்றதே இதனூடாக புலப்படுகின்றது. நாடாளுமன்றத்திலிருந்து கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வடமாகாண சபைக்கு முடியாவிட்டால் வடமாகாண சபை எதற்கு? என்று வினவினார்.
மேலும் வேறு மாகாண சபைகளிடம் கேட்கின்ற கேள்விகளுக்கு உடனடியாக பதில் வழங்கப்படுகின்ற நிலையில் வடமாகாண சபையில் இருக்கின்ற அனைவரும் மன்னர்களா என்றும் குறிப்பிட்டார்.
எனினும் இதற்கு பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரது கவனத்திற்கு கொண்டுசெல்வதாக கூறினார்.
இதன்போது தெளிவுபடுத்தல் ஒன்றை செய்த சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்றைய தினம் வடமாகாண ஆளுநர் நாடாளுமன்றத்திற்கு வருகைதரவுள்ளதாகவும், இதுகுறித்து அவருக்கு தெரியப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here