மஹிந்த பாணியில் மங்கள - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, November 11, 2017

மஹிந்த பாணியில் மங்களஸ்ரீலங்கா அரசு எதிர்நோக்கியுள்ள பாரிய கடன் சுமைக்கு முகம்கொடுக்கும் வகையில் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான விசேட வரியொன்று  2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் அப்போதைய மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் அறிமுகப்படுத்திய பாதுகாப்பு வரியைப் போல் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான விசேட வரியொன்றை மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கின்றது.
நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காகவே இந்த புதிய வரியை அறிமுகப்படுத்த நேரிட்டதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அறிவித்தார்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நேற்று முன்தினம் நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்த நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அந்த திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து நேற்று தனது அதிகாரிகள் சகிதம் ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
இதுகுறித்துத் தெரிவித்த அவர்,
”நாடு தழுவிய ரீதியில் சர்வதேச மட்டத்திலான 10 தொழில்பயிற்சி உயர்கல்வி நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே இரத்மலானை மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் ஜேர்மன் தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வீசா பெறுவதற்கு இவ்வாறான கல்லூரிகளின் சான்றிதழ்களே போதும்.
இதனால் ஜேர்மன் அரசு தொழில்நுட்பத் துறையிலும் சுவிஸர்லாந்து அரசு சுற்றுலா விடுதி தொழிற்துறையிலும் விசேட நிபுணத்துவப் பயிற்சிகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன. இதற்காக சர்வதேச தரத்திலான உயர்கல்வியகங்களை உருவாக்கவும் அந்த நாடுகள் தீர்மானித்துள்ளதுடன் அந்தந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற நிபுணர்களை அனுப்பி வைக்கவும் உள்ளோம்.
இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் 2018 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும். நாட்டில் மது அருந்துபவர்களில் 40 வீதமானோர் கசிப்பு என்ற வடிசாராயத்தையே குடிக்கின்றனர். இதனால் பாரிய சமூகப் பிரச்சனைகளும் எழுந்துள்ளன. அதேவேளை எத்தனோல் இறக்குமதிக்கும் புதிதாக வரிகளை விதித்துள்ளோம். அதேவேளை கடந்த காலங்களில் சாராயம் பீயர் மற்றும் வைன் போன்றவற்றுக்கு மாறுபட்ட விதத்தில் அறவிடப்பட்டுவந்த வரியை முறைப்படுத்தி ஒரு வரியை அறவிடவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என தனது உரையில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages