ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைகிறது மஹிந்த அணி ; மகா சங்கம் ! - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

STAY WITH US

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, November 12, 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைகிறது மஹிந்த அணி ; மகா சங்கம் !



தேசிய அரசாங்கத்தின்  பிரதான கட்சிகளிலொன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் மிக்க செயற்குழுக் கூட்டமொன்று அடுத்துவரும் இரு வாரங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 03ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு, ஒன்றிணைந்த கூட்டு எதிரணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், கூட்டு எதிர்க் கட்சியில் எவரும் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அக்கட்சி நிபந்தனையிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாம் கட்சியில் கலந்துகொள்வதாயின் சில வரையறைகளை கட்சி அறிவிக்க வேண்டும் என அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வரையறைகளில் இணைந்து செயற்படுவதற்கு முடியுமான விட்டுக் கொடுப்புக்கள் குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்கே இக்கூட்டம் இன்னும் இருவாரங்களில் இடம்பெறவுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கடந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சியுடன் இணைய வேண்டும் என மகா சங்கத்தினர் பெரும் பிரயத்தனம் எடுத்து செயற்படுவதாகவும்  தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here