மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, November 12, 2017

மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா






இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வி நிருவாக சேவையில் சித்தியடைந்த கல்வியலாளர்கள் ஆகியோரை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் பரிபாலன சபையின் ஏற்பாட்டில் (12.11.2017) ம் திகதி மீரா ஜும்ஆ பள்ளிவாயளில் பரிபாலன சபைத் தலைவர் ஜனாப் கே.பி.எஸ்.ஹமீட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன் அவர்கள் கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக ஓட்டமாவடி கல்விக் கோட்டப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைட், கல்குடா ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.இஸ்மாயில் (பஹ்ஜி) மீரா உலமாக்கள் ஒன்றியத்தின் தலைவர் மௌலவி யூ. எல்.எம்.இல்யாஸ் (ஷர்க்கி) மற்றும் அதிகாரிகள், பிரமுகர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages