தேர்தலை ஒத்திவைக்க தமிழ் கூட்டமைப்பு காரணம்


உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உடந்தையாக இருப்பதாக முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் குற்றம் சுமத்தியுள்ளார். 


ஹட்டனில் இன்று (25) இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அத்தோடு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உண்மையான காரணம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் இடையில் நடக்கும் முரண்பாடே காரணம் என அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments