Comments System

header ads

பதவி இழப்பாரா அமைச்சர் பைசர் முஸ்தபா


எதிர்வரும் சில தினங்களில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர ஜே.வி.பி தீர்மானித்துள்ளது.
பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்றைய தினம் முற்பகல் வாராந்த ஊடவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த தகவலை வெளியிட்டார்.
கடந்த 2 வருடங்களாக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுவந்துள்ளது.
எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த தேர்தல் நடத்தப்படும் என்ற உறுதிமொழியை அரசாங்கம் வழங்கியிருந்த போதிலும், வர்த்தமானிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படவுள்ள நிலையில் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தீர்மானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

0 Comments