இரண்டு கோடி மதிப்பிலான தங்கக் கடத்தல் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 20, 2017

இரண்டு கோடி மதிப்பிலான தங்கக் கடத்தல்



இலங்கையில் இருந்து சுமார் 2 கோடி மதிப்பிலான 16 கிலோ மற்றும் 800 கிராம் மதிப்புடைய தங்கத்தை  மண்டபத்தில் வைத்து க்யூ பிரிவு  பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையில் இருந்து ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக மண்டபம் க்யூ பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலையடுத்து  மண்டபம் வடக்கு கடற்கரைப்பகுதிக்கு சென்ற பொலிஸார்  நாட்டு படகில் சந்தேகத்திற்கிடமாக வந்ததை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த நபரை தடுத்து நிறுத்தி க்யூ  பிரிவு பொலிஸார் விசாரணை செய்த போது,
குறித்த நபர் கீழக்கரையை சேர்ந்த நசீர் என்றும், அவர் இலங்கை யிலிருந்து நாட்டு படகு மூலம் மண்டபத்திற்கு  தங்கத்தை கடத்தி வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
குறித்த நபரிடமிருந்து  இந்திய மதிப்பில் 2  கோடி ரூபாய் பெறுமதியான சுமார் 16 கிலோ மற்றும் 800 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பாக மத்திய மாநில, உளவுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages