அன்று கல்முனை மக்கள் ஏன் அதாவுல்லாஹ்வை எதிர்த்தார்கள் !!! ; எ.எல்.தவம் (மு.மா.ச ) - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 21, 2017

அன்று கல்முனை மக்கள் ஏன் அதாவுல்லாஹ்வை எதிர்த்தார்கள் !!! ; எ.எல்.தவம் (மு.மா.ச )அரசியல் லாபம் தேடு முன் எல்லைகளை வெளியிடட்டும்.........

கல்முனை - சாய்ந்தமருது பிரச்சினையை அரசியல் முதலீடாக்க பலரும் முயற்சிக்கின்றனர். அல்லாஹ் சமூகத்தில் கலவரங்கள் ஏற்படும் போது, அதனை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களை நிட்சயம் தண்டிப்பான்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் இவ்விடயத்தை வைத்து அரசியல் லாபம் தேட முனைகிறார்....
"நான் சொன்னனே 4 ஆகப் பிரிக்க வாருங்கள் என்று; அப்போது எதிர்த்தீர்கள்; இப்போது நான் சொன்னதைத்தானே செய்ய விரும்புகிறீர்கள்" என்றும் அவர் சொல்லுகிறார்.

அது சரி, அன்று கல்முனையில் இதனை ஏன் எதிர்த்தார்கள்? காரணத்தை வெளிப்படையாகச் சொல்லுங்களேன். கல்முனையை அன்று 4 ஆகப் பிரிக்கத் தீர்மானித்திருந்த - கல்முனைக்கான எல்லைகளை வெளியிடுங்களேன்.

இதனை எனது சவாலாகவே விடுக்கிறேன். இதுவே எனது அரசியல் பயணத்தின் முதலாவது சவால்.

இதற்கு பதில் கூறினால், யாருடைய கொடும்பாவி கல்முனையில் எரியும்? என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இந்தப் பிரச்சினை இவ்வளவு தீவிரமடைய நீங்களும்தான் காரணம்.

இப்போது சும்மா அவுலியா வேசம் போட வேண்டாம். முடிந்தால் அந்த எல்லைகளைச் சொல்லிட்டு அப்புறம் அவுலியா வேசம் போடுங்கள்.
இரண்டு ஊர்களும் நமது சகோதரர்கள். ஆகக்குறைந்தது அவர்கள் முரண்பட்டு முறுகி நிற்பதை எண்ணிக் கவலைப்பட வேண்டும். அவர்கள் மனதளவில் ஒருத்தரை ஒருத்தர் வெறுத்திராமலிருக்கப் பிரார்த்திக்க வேண்டும். அதுவே "முஸ்லிம் உம்மா" என்ற வகையில் நம் கடமை.
அதை விடுத்து "எரிகின்ற வீட்டில் பிடுங்குவது லாபம்" என்ற கொள்கையில் இனியும் நீங்கள் தொடர்ந்தால் அந்த எல்லைகளை நாங்கள் வெளியிட நிர்பந்திக்கப்படுவோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages