Comments System

header ads

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி தேர்தலில் ...?



(றியாஸ் இஸ்மாயில்)
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கான முன்ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றது.

இது தொடர்பான ஆராயும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனக் கூட்டம் அக்கரைப்பற்று ஆலம் நகர் காரியாலயத்தில் எதிர்வரும் 25ம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் முன்னாள் தேசிய தலைவரும்,நிறைவேற்றுப் பணிப்பாளருமான எம்.ஐ.உதுமாலெப்பை தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேச சபைகளில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் தெரிவு இக் கூட்டத்தில் ஓர் அங்கமாக இடம் பெறவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் 0776962209 என்ற கையடக்க தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளுமாறு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments