Comments System

header ads

பிரபாகரனின் பிறந்தநாளுக்கு வவுனியா வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம், குழப்பம்



தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்தநாளுக்கு வவுனியா வளாகத்தில் கேக் வெட்டியமையால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்துத் தெரியவருவதாவது,
யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பம்பைமடு விடுதியில் தங்கியுள்ள முதலாம் வருட மாணவர்கள் இன்று பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியுள்ளனர். பின்னர் தமது விடுதியில் இடம்பெற்ற இந் நிகழ்வை முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
குறித்த புகைப்படங்களை அவதானித்த சிங்கள மாணவர்கள், பிறந்தநாள் கொண்டாடியவர்களுடன் முரண்பட்டுள்ளனர். எனினும் விடுதி மேற்பார்வையாளர் இரு பிரிவினரையும் சமரசம் செய்து வைத்துள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை வவுனியா வளாகத்தின் குருமன்காடு கற்கைகள் பீடத்திலும் இதே சம்பவம் இடம்பெற்ற நிலையில் சிங்கள மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் இடையில் முரண்பாடு இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
இந் நிலையில் பூங்கா வீதியில் அமைந்துள்ள வளாகத்தின் நிர்வாக அலுவலகத்திற்கு இரவு 9 மணியளவில் வருகை தந்த சிங்கள மாணவர்கள் கேக் வெட்டிய மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments