Comments System

header ads

கிழக்கில் கூட்டமைப்பின் வியூகம்; திருமலை சென்றார் சம்பந்தன்!


புதிய அரசியல் அமைப்பிற்கு ஆதரவு வழங்கவும், உள்ளூராட்சி சபை தேர்தலில் வெற்றி கொள்வதற்கான வியூகங்களை வகுக்கவும் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த்   தேசிய கூட்டமைப்பு தீவிர பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த பிரசார நடவடிக்கைகள் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தவைருமான இரா.சம்பந்தன் தலைமையில் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. 
கொழும்பில் இருந்து நேற்றையதினம் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கு புறப்பட்ட இரா.சம்பந்தன், அங்கு மக்கள் சந்திப்பில் ஈடுபடவுள்ளார். 
இந்த சந்திப்பின்போது புதிய அரசியல் அமைப்பு குறித்தும், உள்ளூராட்சிசபை தேர்தலில் வெற்றி கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளார். 
இந்த விடயங்கள் தொடர்பான அடுத்தகட்ட சந்திப்புக்கள் நாளையதினம் மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் இடம்பெறவுள்ளன. 
கூட்டமைப்பின் தலைமையுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள்   மற்றும் உள்ளூராட்சி சபைகளின்   முன்னாள் நாடாளுமன்ற   உறுப்பினர்கள்   என பலரும்  கலந்துகொள்ளவுள்ளனர்.

Post a Comment

0 Comments