Header Ads

Breaking News

சாய்ந்தமருது கடலில் நீராடிய மாணவன் மாயம்



அம்பாறை சாய்ந்தமருது கடலில் நண்பர்களுடன் நீராடிய மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
அதேவேளை, கடல் அலையில் சிக்குண்டு நீரில் மூழ்கிய இரு மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
சாய்ந்தமருது முகத்துவாரத்தை அண்மித்துள்ள கடலில், நேற்று  சனிக்கிழமை மாலை கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் கல்வி பயில்கின்ற ஆறு மாணவர்கள் நீராடியுள்ளனர்.
இதன்போது இருவர்  கடல் அலையில் சிக்குண்டு மூழ்கிய நிலையில் மீனவர்களினால் காப்பாற்றப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை மூன்று மாணவர்கள் பாதிப்பு எதுவுமில்லாமல் கடலில் இருந்து வெளியேறி, வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் சாய்ந்தமருது 11 ஆம் பிரிவை சேர்ந்த, முஹம்மட் லத்தீப் முஹம்மட் இன்ஸாத் எனும் மற்றொரு மாணவன் காணாமல் போயுள்ளார்.
காணாமல் போனவரை தேடும் பணிகளை, மீனவர்களின் உதவியுடன் அவரது குடும்பத்தினர் முன்னெடுத்துள்ளதுடன் அது தொடர்பாக கல்முனை பொலிஸில் முறைப்பாடொன்றினையும் பதிவு செய்துள்ளனர். 

No comments