Comments System

header ads

அட்டாளைச்சேனை தேசியப்பட்டியலுக்கு யார் தடை ?



அட்டாளைச்சேனைக்கான மு.கா வின் தேசியப் பட்டியல்  வழங்கப்படாமைக்கான காரணம்  ஐ.தே.க மூலமான இத் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெற்றுக்கொள்ள மு.கா வின் இன்னுமொரு பெரும் புள்ளி ஐ.தே.க வின் மேலிடம் மூலமாக முனைத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

மு.கா மீதான அதிருப்தி அணி மற்றும் எதிர்கட்சிகள் என்பன தேசியப்பட்டியல் அட்டாளைச்சேனைக்கு வழங்கப்பட மாட்டாது என கூறிவரும் நிலையிலேயே இவ்வாறன தகவல்கள் மக்களிடையே பரபரப்பினை உண்டாக்கியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலோன்றினை எதிர்நோக்கியுள்ள இந்நிலையில் அட்டாளைச்சேனை மக்களின் நீண்ட கால கனவாக இருந்து வரும் தேசியப்பட்டியலினை பெற்றுக் கொள்ள அவர்கள் காட்டும் அவாவினையும் ஆதங்கத்தினையும் புரிந்து கொள்ளாத மு.கா வின் அந்த பிரமுகர் மீது மக்கள் கடும் விசனத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். மு.கா மூலமான அனைத்து அதிகாரங்களையும் தான் ஒருவரே பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அவரது சுயநலம் மு.கா போராளிகளையே முகம் சுளிக்க வைத்துள்ளது. 

தேசிய ரீதியில் முஸ்லீம்களின் பிரச்சனைகள் மற்றும் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மு.கா பெரிதும் முனைப்பு காட்டும் இந்நிலையில் தலைவருக்கு மேலும் தலைவலியை உண்டாக்கும் இந்நிகழ்வுகள் பெரிதும் விரும்பத்தாகதகவே கட்சிக்கும் இருக்கும். 

இவ்வாறான தகவல்கள் வெறும் வதந்திகள் என வாதிட்டு நியாயப்படுத்தும் மு.கா ஆதரவாளர்கள் தமது நியாத்தை மெய்ப்பித்துக் கொள்ள தலைவரின் கண்களையே பார்த்த வண்ணம் உள்ளனர். 

Post a Comment

0 Comments