பட்டதாரிகளை கைவிட்ட நல்லாட்சி அரசு - மட்டக்களப்பில் நல்லாட்சிக்கு எதிர்ப்பு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

STAY WITH US

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 28, 2017

பட்டதாரிகளை கைவிட்ட நல்லாட்சி அரசு - மட்டக்களப்பில் நல்லாட்சிக்கு எதிர்ப்புகிழக்கு மாகாண ஆசிரியர் நியமனத்தில் உள்வாங்கப்படாத பட்டதாரிகள் மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பகல் காந்திப் பூங்கா அருகில் நடைபெற்றது.
அரசியல்வாதிகளும், ஆளுநரும் தங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகத் தெரிவித்த பட்டதாரிகள், ஆசிரியர் நியமனப் பரீட்சையில் 40 புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற அனைவருக்கும் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள், மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
தங்களது பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் நோஹித்த போகொல்லாகமவுக்கும் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளதாகவும், இதன் பிரதிகள் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஜீ.கே. முத்துபண்டாவுக்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும் பட்டதாரிகள் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here