Comments System

header ads

இலங்கையிலும் நில நடுக்கம் !!!



ஈரான்–ஈராக் எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஸ்ரீலங்காவிலும் உணரப்பட்டதாக புவிச்சரிதவியல், ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரிச்டர் அளவில் 7.3ஆக பதிவான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் சுமார் 450 பேர்வரை உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஈரான் – ஈராக் எல்லை நகரங்களில் மீட்புப் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்நிலநடுக்கத்தின் உணர்வு மஹகனதராவ மற்றும் பல்லேகலை ஆகிய பகுதிகளிலுள்ள நிலநடுக்க உணர்வுமானியில் பதிவாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments