Comments System

header ads

அம்பாறை, மட்டகளப்பில் எந்தெந்த சபைகளுக்கு தேர்தல் ? - விபரங்கள் உள்ளே


வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் ஐந்து உள்­ளூ­ராட்சி சபைகளுக்கான, தேர்தல் அறி­விப்பே இன்று வெளி­யி­டப்­படும் என்று தேர்தல் ஆணையக வட்­டா­ரங்­கள் தெரிவித்துள்ளன.

உள்­ளூ­ராட்சி சபைகள் தொடர்­பான வர்த்­த­மானி அறி­விப்­புக்கு மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் விதித்­துள்ள இடைக்­காலத் தடையினால், 203 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு ஏற்­க­னவே திட்டமிட்டபடி உட­ன­டி­யாக தேர்தல் நடத்த முடி­யாத நிலை ஏற்பட்டுள்­ளது.

எஞ்­சி­யுள்ள, 133 சபை­க­ளிலும், 40 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான வர்த்­த­மானி அறி­விப்பும் திருத்­தப்­பட வேண்­டி­யுள்­ளது. ஏனைய 93 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­குமே இன்று வேட்­பு­ம­னுக்­களை கோரும் அறி­விப்பு வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

வடக்கில் சாவ­கச்­சேரி நகர சபைக்கு மாத்­திரம், இன்று வேட்­பு­மனுக் கோரும் அறி­விப்பு வெளி­யி­டப்­படும். 

கிழக்கு மாகா­ணத்தில், 
மட்டக்க­ளப்பு மாவட்­டத்தில்  
01. ஏறாவூர் நக­ர­சபை, 
02. ஏறாவூர்ப்பற்று பிர­தேச சபை, 
03. கோர­ளைப்­பற்று பிர­தேச சபை, 
04. மண்முனை பிர­தேச சபை ஆகி­ய­வற்­றுக்கு மாத்­திரம் தேர்­தல்­களை நடத்தக் கூடிய நிலை உள்­ளது.

அம்பாறை மாவட்டத்தில்
1. நாமல் ஓயா பிரதேச சபை
2. தெஹியத்தகண்டிய பிரதேச சபை
3.வாரியபொல பிரதேச சபை,
4. அக்கரைப்பற்று மாநகர சபை,
5. அட்டாளைச்சேனை பிரதேச சபை,
6.லஹுகல பிரதேச சபை,
7.கரைதீவு பிரதேச சபை,
8.சம்மாந்துறை பிரதேச சபை
9.அக்கரைப்பற்று பிரதேச சபை,
10.நாவிதன்வெளி பிரதேச சபை
11.இறக்காமம் பிரதேச சபை
12.ஆலையடிவேம்பு பிரதேச சபை

ஆனால் அம்பாரை மாவட்ட தமிழ் மொழி பிரதேசங்களான கல்முனை, நிந்தவூர், திருக்கோவில், பொத்துவில் ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல் இல்லை

அதே­வேளை, 40 உள்­ளூ­ராட்சி சபைகள் தொடர்­பான, வர்த்தமானியில் திருத்தம் செய்யும் அறி­வித்தல் வெளியிடப்பட்டாலும் கூட, வடக்கில் இரண்டு சபை­க­ளுக்கு மாத்திரம் தேர்­தல் நடத்தப்பட முடியும். யாழ். மாவட்டத்தில் உள்ள வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு பிரதேச சபைகளுக்கான தேர்தல்களையே நடத்த முடியும் என்றும் அறிவிக்கப்படவுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான புதிய திருத்தச் சட்டத்தின் முறையில் நடைபெறும் தேர்தல் வேப்புமனு நியமனங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை 11 டிசம்பர் 2017 ஆம் திகதி தொடக்கம் 14 டிசம்பர் 2017 ஆம் திகதி நண்பகள் 12 மணியுடன் முடிவடையும்.  

Post a Comment

0 Comments