தடையை தாண்டுமா நல்லாட்சி அரசு ? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 22, 2017

தடையை தாண்டுமா நல்லாட்சி அரசு ?


- அபூ ஜாஸி - 
ஜனவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தல் பின்தள்ளிப் போகலாம் என்கிற உறுதியான மனோநிலை இன்றைய நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் கடைசிக் குடிமகன் வரைக்கும் எழுந்துள்ளது. ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக ஐ.தே.க தனது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காகவே இம்முறை தேர்தல்பின்தள்ளிப் போகிறது எனலாம். 

நல்லாட்சி அரசு என மஹிந்த அரசை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த ஐ.தே.க அரசு ஆரம்பம் முதலே உள்ளூராட்சி தேர்தலோன்றினை நடாத்துவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் இருந்தன. இருப்பினும் தேர்தல் முறை மாற்றம் ஒன்றை கருத்திற்கொண்டதுடன், அதிகாரம் இல்லாத மஹிந்தவையும் சுதந்திரக்கட்சியையும் பிரித்து விடுவதற்கான தருணம் பார்த்து வந்த அதி புத்திசாலித்தனமே இன்றைய கையறு நிலையை ஐ.தே.க வுக்கு கொண்டு வந்திருக்கின்றது. 

ஐ.தே.க வின் கண்முன்னே இரண்டு பாரிய சவால்கள்  பூதாகரமாகி விட்டிருக்கின்றன.
01. மத்தியவங்கி பிணை முறி தொடர்பிலான விசாரணை ஆணைக்குழு அறிக்கை. மக்கள் நம்பிகைக்கான நேர்மாறு நிலை. 
02. ஒத்துப் போக எத்தனிக்கும் மஹிந்த மைத்ரியுடன், புதிய அரசியலமைப்பு தொடர்பிலான மகா சங்கத்தினரின் நிலைப்பாடு. அதற்காக எதிர்நோக்கியுள்ள மக்கள் ஆணை "பொது சன அபிப்பிராயம் " 

இவ்விரண்டில் எதை எதிர்நோக்குவதாயினும் பிரதமர் பதவி மிக மிக அவசியமாகின்றது. முதலாவது சவாலே பிரதமர் பதவியை பிய்த்து எடுப்பதற்கான முயற்சிதான். ஜனாதிபதியின் நிலையோ ஐ.தே.க வினை விட மிக மோசமானது. 

ஐ.தே.க பிரதமர் பதவியை தக்கவைக்க வேண்டும் என்பதைவிட, மகிந்தவுக்கு அல்லது மஹிந்த சார் ஒருவருக்கு அப்பதவி போய்விடக் கூடாது என்பதிலும் குறியாய் இருக்க வேண்டும். வளர்ந்து வரும் மக்கள் அதிருப்தி ஒருபுறம் என்று பல தலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கின்ற நிலை. 

எது எவ்வாறிருப்பினும் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் தேர்தலொன்றினை அரசு நடாத்த எத்தனிக்கும். சர்வதேசிய அழுத்தங்களுக்கும் தாண்டிவிட்ட தடைகளுக்கும் ஒத்தடமாய் அது அமையும். அதற்காக மக்களை மறக்கடிக்க அல்லது மகிழ்விக்க எதை அரசு தரப்போகிறது என்பதே இந்த காலத்திற்கான மெகா கேள்வி 


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages