அக்கரைப்பற்று சேர்ந்துவிடக் கூடாதென்று ஏன் அதாவுல்லாஹ் செயல்பட்டார் ? - ஏ.எல். தவம் (மு.மா.ச.உ ) - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 14, 2017

அக்கரைப்பற்று சேர்ந்துவிடக் கூடாதென்று ஏன் அதாவுல்லாஹ் செயல்பட்டார் ? - ஏ.எல். தவம் (மு.மா.ச.உ )எல்லை நிர்ணயத்தில் அதாவுல்லாவின் துரோகத்தின் பின்னணி 

மாகாண சபைத் தேர்தலில் பெரும்பான்மைக் கட்சிகளோடு இணைந்து போட்டியிட்டு – தனது மூன்று வேட்பாளர்களை நிறுத்தி - தன்னிடம் கடந்தகாலத்தில் இருந்த சுமார் 25,000 வாக்குகளையும் மூன்று வேட்பாளர்களுக்குமான தெரிவு வாக்காக இடுவதன் மூலம் – மூன்று உறுப்பினர்களை அதாவுல்லா பெற்றுக்கொண்டு வந்தார்.

அப்பெரும்பான்மைக் கட்சியின் சிங்கள வேட்பாளர்கள் – ஒற்றுமையாக மூன்று பேருக்கு தெரிவு வாக்குகளை இடுவதில் ஒற்றுமைப்பட முடியாத சூழல் - அதாவுல்லாவிற்கு அவ்வாறு தனது மூன்று வேட்பாளர்களையும் வெல்ல வைக்கும் வாய்ப்பினைக் கொடுத்திருந்தது. அது இதுவரை இருந்த விகிதாசார தேர்தல் முறையிலேயே சாத்தியப்படக்கூடிய விடயமாக இருந்தது.

ஆனால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொகுதிரீதியிலான மாகாண சபைத் தேர்தல் முறையில் இது அதாவுல்லாவிற்கு சாத்தியமற்றதாகும். அந்தந்த தேர்தல் தொகுதிக்குள் இருப்பவர்கள் அந்தந்த தேர்தல் தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளின் ஒரேயொரு வேட்பாளருக்கு மட்டுமே வாக்களிக்க முடியும். அதனால், அதாவுல்லாவிற்கு ஒரு மாகாண சபை உறுப்பினரை வென்றெடுப்பது கூட ‘’ முயற்கொம்பாக அமையும்’’ என்பதே நிதர்சனம்.

அதனால், தனக்கு அதிகாரத்தை பெற்றுத்தராத தேர்தல் முறைமையில் அக்கரைப்பற்று ஒன்றாக இருந்தால் என்ன? பிரிந்திருந்தால் நமக்கென்ன? எக்கேடாவது கெட்டுப் போகட்டும் என அதாவுல்லா எண்ணுகிறார்.

அதனால்தான், இரண்டு தொகுதிகளின் கீழ் துண்டாடப்பட்டுக் கிடக்கும் அக்கரைப்பற்றை ஒன்று சேர்க்கும் விடயத்தில் தனது அக்கறை இன்மையைக் காட்டி இருக்கிறார். தான் முன்மொழிவை சமர்ப்பிக்கவில்லை என்று எழுத்து மூலம் கொடுத்து அக்கரைப்பற்றிற்கு துரோகம் இழைத்திருக்கிறார்.

அதுமாத்திரமல்லாமல், இவ்வாறு அமையவிருக்கும் மாகாண சபைத் தேர்தல் தொகுதிகளை அடிப்படையாக வைத்துத்தான் - பாராளுமன்ற தேர்தல் தொகுதிகளும் உருவாக்கப்படப் போகின்றன.

அவ்வாறு உருவாக்கப்படும் பாராளுமன்றத் தேர்தல் தொகுதியிலும் - தனக்கு வெற்றிபெறும் சந்தர்ப்பம் இல்லாமல் இருப்பதால் - அக்கரைப்பற்றின் 28,000 வாக்குகளும் ஒன்று சேர்வதால் தனக்கு அறவே பிரயோசனம் இல்லை என்பதால் - அக்கரைப்பற்றை ஒன்று சேர்க்கும் விடயத்தில் தனது அக்கறை இன்மையைக் காட்டி இருக்கிறார்.

தனக்குப் பிரயோசனம் இல்லை என்பதற்காக - அக்கரைப்பற்று ஒன்றாகச் சேர்க்கப்பட்டு – தனது 28,000 வாக்குகளையும் கொண்டு யாரையாவது ஒருவரை – எக்கட்சியிலாவது ஒரு மாகாண சபை உறுப்பினராக அல்லது பாராளுமன்ற உறுப்பினராக பெறுகின்ற சாத்தியத்தை உருவாக்குவதற்கான அடிப்படை அம்சமாக அமையும் - பிளக்கப்பட்டிருக்கும் அக்கரைப்பற்றை இணைத்து ஒரே தொகுதியின் கீழ் கொண்டு வருவதற்கான எத்தனத்தைச் செய்யாமல் விடுவது – அக்கரைப்பற்றிற்கு செய்யும் மன்னிக்க முடியாத வரலாற்றுத் துரோகமன்றி வேறென்ன?

தனக்கு அதிகாரத்தைப் பெறுவதாக இருந்தால் மட்டுமே தனக்கு ஊர் வேண்டும் - இல்லையென்றால் அக்கரைப்பற்று நாசமடைந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பது எவ்வளவு அக்கிரமம். இதனை நியாயப்படுத்த முனைபவர்கள் இந்த துரோகத்தின் பங்காளிகள் அன்றி வேறு யாராக இருக்கும்? - நிந்தவூர் முஸ்தபா பிரித்தது துரோகம் என்றால், பிரித்ததை சேர்க்க சந்தர்ப்பம் கிடைத்தும் அதற்காக முயற்சிக்காமல் இருப்பது அதை விடத் துரோகம் இல்லையா?

-எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்-

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages