மு.கா பின் பிரதம அதிதியை ஓரங்கட்டிய ஐ.தே.க முக்கிய புள்ளி ; கல்குடாவில் அதிரடி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

STAY WITH US

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, November 19, 2017

மு.கா பின் பிரதம அதிதியை ஓரங்கட்டிய ஐ.தே.க முக்கிய புள்ளி ; கல்குடாவில் அதிரடிஅமைப்பாளர் றியாலுக்கு முன்பாக செம்மண்ணோடை பாடசாலைக்கு மூன்று இலட்சம் தருவதாக ஹனீபா (மம்மலி) விதானை வாக்குறுதி

வீடியோ நிகழ்வின் காணொளி - www.youtube.com/watch?v=VkmUQkqa7Ws&feature=youtu.be

கல்குடா செம்மண்ணோடை அல்-ஹம்றா பாடசாலையில் இன்று 19.11.2017 ஞாயிற்று கிழமை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கல்குடா தொகுதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்அமைப்பாளர்  எச்.எம்.எம் றியால் முன்னிலையில் பிரதேசத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய புள்ளியும், ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலின் இணைத்தலைவருமான ஹனீபா (மம்மலி) விதானை மூன்று இலட்சம் ரூபாய்களை பாடசாலையின் சுற்று மதில் கட்டுவதற்காக உடனடியாக தருவதாக  பகிரங்கமாக கொடுத்த வாக்குறுதியானது அரசியல் ரீதியாக மம்மலி விதானையின் காய் நகர்த்தலினையும், அவர் பிரதேச , சமூக ரீதியாக அவர் வைத்திருக்கும்  ஈடுபாட்டினை எடுத்துக்காட்டும் விடயமாக எல்லோராலும் பார்க்கப்பட்டது.

பாடசாலையின் அதிபதிபர் எம்.எஸ்.சுபைதீன்  உரையாற்றும் பொழுது அமைப்பாளர் றியாலிடம் பாடசாலைக்கு தேவையாக உள்ள சுற்றுமதில், மற்றும் தேவையாக உள்ள மூன்று மாடியுடனான ஆராதனை மண்டபத்தினை  ஸ்ரீ லங்கா முச்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான அப்துர் ரவூப் ஹக்கீமிடம் எடுத்துரைத்து பெற்றுத்தருமாறு வைத்த வேண்டுகோலினை செவி மடுத்த ஹனீபா (மம்மலி) விதானை மெற் கூறியவாறு தனது வாக்குறுதியினை உடன் பாடசாலை அதிபரிடம் தெரிவித்து அதனை பகிரங்கமாக அதிபர் சுபைதீன் மூலம் குழுமியிருந்த மக்களுக்கு தெரியப்படுத்தினார்.

அது மட்டுமல்லாமல் குறித்த நிகழ்வான முன்பள்ளி மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்விற்கு தனது பூரண அனுசரணையினை வழங்கிய ஹனீபா விதானை பிரதேசத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் வளர்ச்சியிலும், சமூக சேவையிலும்  பெரும் பங்காற்றிவருது முக்கிய விடயமாகும். அத்தோடு குறித்த நிகழ்விற்கு விஷேட அதிதிகளாக அக்கீல் டயர் வியாபார தள உரிமையாளர் .எல்.எம்.நியாஸ் ஹாஜி, கல்குடா தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞர் அமைப்பளர் சபீர் மெளலவி, கலாச்சார உத்தியோகத்தர் .எல்.பீர் மொஹம்மது ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்

மேலும் பிரதம அதிதியாக உரையாற்றிய அமைப்பாளர் றியால் பாடசாலையின் அதிபர் முன்வைத்த வேண்டுகோல்களையும், ஏனைய அபிவிருத்திகளையும் மேற்கொள்வது சம்பந்தமாக தனிப்பட்ட முறையில் பாடசாலை நிருவாகத்துடன் கலந்தாலோசித்து எதிர் காலத்தில் அபிவிருத்திகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here