குறைபாடுடைய தீர்வை ஏற்றால் தமிழ் சமூகம் பாதிக்கப்படும் ; சம்பந்தனை சாடுகிறாரா விக்கி ? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, November 12, 2017

குறைபாடுடைய தீர்வை ஏற்றால் தமிழ் சமூகம் பாதிக்கப்படும் ; சம்பந்தனை சாடுகிறாரா விக்கி ?



அரசாங்கம் முன்வைக்கும் குறைபாடுகளைக் கொண்ட அரசியல் தீர்வை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், எதிர்கால தமிழ் சமூகமே பாதிக்கப்படும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட மாகாணத்தில் மக்களின் செறிவை மாற்றுவதற்கு பல விதமான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் இவ்வாறான சூழலில் அரைகுறையான அரசியல் தீர்வு ஏற்றுக்கொண்டால் அது பாரதூரமான பின்விளைவுகளுக்கே வித்திடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம், இணைத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று நடைபெற்றது.
இணைத்தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வைத்தியர் பீ.லக்ஸ்மன், மட்டக்களப்பு மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் ரீ.வசந்தராஜா ஆகியோருடன், ஈ.பீ.ஆர்.எல் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழர் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இந்த கூட்டத்தில் இடைநடுவில் காரணமொன்றை கூறி வெளியேறிய வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதன் பின்னர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அரைகுறை அரசியல் தீர்வை ஏற்றுக்கொண்டால் எதிர்கால தமிழ் சமூகமே பாரிய பாதிப்புக்களை எதிர்கொள்ளும் என தாம் இதன்போது வலியுறுத்தியதாக சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
கட்சிக்கு உழைப்பவர்களை அன்றி, தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்ககூடிய தகைமை உள்ளவர்களை எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நிறுத்த வேண்டும் என தாம் வலியுறுத்தியதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் பிரிந்து செல்லாமல் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிதன் அவசியத்தை வலியுறுத்திய சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவை, கட்சி ரீதியாக செயற்படாது எனவும் அதுவொரு மக்களின் இயக்கம் எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages