உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை யார் பக்கம் ; களப்பதிவு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 16, 2017

உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை யார் பக்கம் ; களப்பதிவு


அபூ ஜாஸி - 
உள்ளூராட்சி தேர்தல் நடாத்தப்படப் போவதாக அறிவிக்கப்பட்டதுவும் அரசியலின் அடிப்படை பொது தளங்கள் பெரிதும் உசாரான நிலையை அடைந்துள்ளது எனலாம். அதுவும் முஸ்லீம் பிரதேசங்கள் ஒரு படி மேலே.

விசேடமாக வட்டார முறையிலான ஒரு தேர்தலை மு.காவும் முஸ்லீம் சமூகமும் தனியாக எதிர்நோக்குகின்றது. முஸ்லீம் கூட்டமைப்பகவோ அல்லது தனித்தனியாக எதிர்வரும் தேர்தலை எதிர்நோக்கும் எதிரணி அரசியல் வியூகங்களும், தேர்தல் தந்திரோபாயங்களும் மிக உறுதியான நிலையை அடைந்துள்ளது. 

முஸ்லீம் கூட்டமைப்புக்காக அமைச்சர் ரிஷாத் எதையும் விட்டுக்கொடுக்க தயாராகவுள்ளதாக அவர்தரப்பு உயர்பீடங்கள் கதைத்துக்கொள்கின்றன. இருப்பினும் NFGG, NUA போன்றன தமது தமது ஆதரவை காட்டியுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. தூய மு.கா அணி முக்கியஸ்தர்களே இதனை முன்னெடுப்பதாகவும் கூட்டமைப்புக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 

அக்கரைபற்றை தளமாக கொண்ட தேசிய காங்கிரஸ் தலைமை வன்னித்தலைமையை மிக காரசாரமாக விமர்சிப்பதுவும், வன்னியில் தமது கட்சியை வளர்க்க முயற்சிப்பதுவும் சம  பேரம் பேசும் தந்திரமாக ஒருபுறம் காட்டப்பட்டாலும், ரிஷாதுடன் இணைந்து செல்ல தயாராயில்லை என்கிற மறுமுகமே பெரிதும் பேசப்படுகிறது. 

இன்றையை நிலையின் பிரகாரம் 

அம்பாறையில் மு.கா வின் உறுதியான தளங்களான அட்டாளைச்சேனை, நிந்தவூர் , கல்முனை, இறக்காமம், பொத்துவில் போன்ற எல்லா தளங்களிலும் மு.கா மீதான அதிருப்தி மனநிலை பெரிதும் வெளிப்படையாக பேசப்பட்டாலும், தேர்தல் ஒன்றில் மிக போட்டியுடன் வெல்லக்கூடிய நிலை மு.கா சார்பாக காணப்படுகிறது. கூட்டமைப்பு தம்மை நிலை நிறுத்த மு.கா வின் பால் கூடுதல் விலை செலுத்த வேண்டியிருக்கும். 

விசேடமாக நிந்தவூர் தவிசாளர் மற்றும் அட்டாளைச்சேனை தவிசாளர் மற்றும் பிரிந்து நிற்கின்ற உள்ளூராட்சி உறுப்பினர்கள், கட்சித்தலைமை மீதான அதிருப்தி மற்றும் உள்ளூர் அரசியல் தலைமைகளின் ஆதிக்கம், எல்லாவற்றையும் விட மேலாக ஆதிக்கம் பெற்றும் வரும் சுயாதீன குழுக்கள் என மு.கா எதிராளிகள் நிலை வலுத்துக் காணப்படுகின்றது. கடைசி நேரத்தில் வேட்டுவிழும் வேட்பாளர்களும் இந்நிலையை அடையலாம்.  
   
அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் விவகாரம் முற்றுப் பெரும் நிலையில் சில இடங்களில் இவ்வாறான இறுக்கங்களை தவிர்த்துக் கொள்ள முடியும். பொறுத்துப் பார்ப்போம் மாற்றங்களை நாம் தெரிவிப்போம். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages