முறுகல் நிலை நீடிக்கிறது ; என்னை நல்லாட்சி ஓரம் கட்டுகிறது - ராஜாங்க அமைச்சர் ராதாகிருஸ்ணன் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, November 12, 2017

முறுகல் நிலை நீடிக்கிறது ; என்னை நல்லாட்சி ஓரம் கட்டுகிறது - ராஜாங்க அமைச்சர் ராதாகிருஸ்ணன்நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்ற நல்லாட்சி அரசாங்கம் தமக்கு சந்தர்ப்பம் தருவதற்கு மறுப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதகிருஷ்னண் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கல்வி இராஜாங்க அமைச்சரான தனக்கு எந்தவொரு அதிகாரமும் வழங்கப்படுவதில்லை என தெரிவித்த கருத்துக் குறித்து ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கண்டியிலுள்ள அழகுகலை நிறுவனத்தின் மண பெண் அலங்கார போட்டியும் அணிவகுப்பும் பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கண்டி இந்து கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உட்பட பலர் கலந்துக் கொண்ட நிலையில், இராஜாங்க அமைச்சருக்கு அதிகாரம் எதுவும் வழங்கப்படுவதில்லை என கருத்துக் கூறியமை குறித்து ஊடகவிலாளர்கள் இராதகிருஷ்ணனின் வினவினர்.
"இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு நாமும் பங்களிப்பு வழங்கியிருந்தோம்.எமக்கு இராஜாங்க அமைச்சை வழங்கிவிட்டு, ஒரு விடயத்தை செய்ய முடியாவிடின், நான் அமைச்சுக்கு சென்று இலிகிதராக பணியாற்ற முடியாது.எனக்கும் கொள்கை இருக்கின்றது.எமது மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் சேவையாற்ற வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.அந்த வாய்ப்பு கிடைக்காமை தொடர்பிலேயே நான் கருத்து வெளியிட்டிருந்தேன்.எனினும் நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான கருத்துக்களை வெளியிட வாய்ப்பு இருக்கின்றது. முன்னர் போன்று அல்ல. முன்னர் என்றால் இவ்வாறு கருத்து வெளியிட்டால் அந்த பதவியில் நான் இருந்திருக்க முடியாது. நல்லாட்சி அரசாங்கத்தில் அதனை செய்ய முடியும். ஆகவே தான் நான் எனது கருத்தை வெளியிட்டேன்.
இராஜாங்க அமைச்சர்களுக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படாமை குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு எடுத்துக் கூறியுள்ள போதிலும் இதுவரை உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை" என அவர் சுட்டிக்காட்டினார்.
"ஏனைய அமைச்சர்களுக்கும் இந்த பிரச்சினை இருக்கின்றது. இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் கூறியுள்ளோம். பிரதமருக்கும் கூறியுள்ளோம். இது தொடர்பில் ஆராய்ந்து தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக அவர்கள் கூறியிருந்தார்கள். எனினும் எந்தவொரு தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை.நான் மாத்திரமல்ல ஏனைய இராஜாங்க அமைச்சர்களும் இது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் எடுத்துக்கூறியுள்ளனர். இதே பிரச்சினை அவர்களுக்கும் உள்ளது." என்று குறிப்பிடு, அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் இல்லை எனக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் இராதகிருஷ்ணன், தாம் பதவி விலகுவதாக ஊடகங்களில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
”அரசாங்கத்தில் இருந்துகொண்டே இதற்காக நாம் போராடுவோம். அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் தேவை எமக்கு இல்லை. இந்த அரசாங்கத்தை நாமே ஆட்சிக்கு கொண்டுவந்தோம். ஏன் நாங்கள் வெளியேற வேண்டும் ? இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நான் விலகுவதாக தவறான செய்தியொன்று வெளியாகியுள்ளது. அதனை நான் சரி செய்துள்ளேன். ஏனைய ஊடகங்களுக்கும் இதனை நான் கூறியுள்ளேன். எமக்கு இடையில் பிரச்சினையை ஏற்படுத்த அல்லது என்னை வெளியேற்ற யாராவது இவ்வாறு செய்வார்கள் ஆயின் அது தவறானது. தமிழ் முற்போக்கு கூட்டணியில் உள்ள ஆறு பேர் அரசாங்கத்தில் இருக்கின்றோம். எமக்கு கட்சியொன்று உள்ளது.அந்த கட்சியில் இருந்து கொண்டு இதற்காக நாம் போராடுவோம். எனினும் எமக்கு வெளியேறிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர தமிழ் கட்சியில் இருந்து நானே முதலில் வெளியேறினேன்.” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages