Comments System

header ads

கிழக்கு மக்கள் அவதானம்



வட கிழக்கில் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு கிழக்கில் இடியுடன் கூடிய மழை காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த பகுதியில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை தென்படும்  என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமேற்கு, மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் கரையோர பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வடமாகாணங்களின் சில பகுதிகளில் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் 75 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என்றும் அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாகாணங்களின் கரையோர பிரதேசங்களில் ஓரளவுக்கு காற்று வீசக்கூடும்.அத்துடன், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம், திருகோணமலை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலான கடற்கரையோரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது. 
இடிமின்னல் தொடர்பில் பொதுமக்களை அவதானத்தடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment

0 Comments