சுதந்திரகட்சி கூட்டு எதிர்கட்சியுடன் இணைந்தது ; அரசில் மாற்றங்கள் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 23, 2017

சுதந்திரகட்சி கூட்டு எதிர்கட்சியுடன் இணைந்தது ; அரசில் மாற்றங்கள்




ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. 

இதன்போது, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் பிணை முறி மோசடி விவகாரம் போன்ற விடயங்கள் குறித்து நீண்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக, அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார். 

மேலும், அடுத்து வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்து போட்டியிட இந்தக் கலந்துரையாடலின் போது, இணக்கம் காணப்பட்டுள்ளது. 

மத்திய செயற்குழுவின் கலந்துரையாடல் நிறைவடைந்த பின்னர், ஊடகங்களிடம் கருத்து வௌியிட்ட முன்னாள் பிரதமர் தி.மு.ஜெயரத்ன இதனைக் கூறியுள்ளார். 

எதுஎவ்வாறு இருப்பினும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைய வேண்டிய தேவை இல்லை என, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடாதிருக்க செய்ய முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages