Comments System

header ads

விக்னேஸ்வரன் இணைப்பைத் தீர்மானிக்கும் ஏக அதிகாரமல்ல - ஏ.எல். தவம் மு.மா.ச.உ



 .............

இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்கும் ஏக அதிகாரம் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அல்ல. அதனால் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

ஆனால், வடக்கு – கிழக்கை இணைக்க விரும்பும் அவர்களின் விருப்பை அவர் வெளிப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.

அதேபோன்று, இணைந்து வாழ்வதா? தனியான அலகு பெற்று முஸ்லிம்கள் சுயநிர்ணயத்தோடு வாழ்வதா என்பதை முஸ்லிம்கள் தீர்மானிக்கும் உரிமை இருப்பதை அவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இரண்டும் இருந்து தீர்மானிக்கப்பட வேண்டும். அதனை இவ்விரு தரப்புக்கள் மட்டும் அல்ல – இணைப்பதற்கும் – தனியான அலகு கொடுப்பதற்கும் – மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்க வேண்டியதும் – சர்வஜன வாக்கெடுப்பில் வாக்களிக்க வேண்டியதுமான – பெரும்பான்மை சமூகமும் ஒன்றாக இருந்து தீர்மானிக்க வேண்டும்.

தவிர, விக்னேஸ்வரன் ஐயா மாத்திரம் அல்ல. அதனால் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

தமது தலைமையோடு அவருக்கிருக்கும் முரண்பாடுகளை - உள்ளுக்குள் தீர்த்துக்கொள்ளத் தெரியாமல் ஊடங்களில் எதிர்ப் பதிவிடும் அவசரத்தில் - அவர் சொல்லும் செய்திகள் - அவரை ஏக தீர்மானிக்கும் சக்தியாக மாற்றி விடாது என்பது அவருக்கும் தெரியும்.

Post a Comment

0 Comments