Header Ads

Breaking News

இரண்டாவது நாளாகவும் மூடப்பட்டது விமான நிலையம்

இந்தோனேஷியாவின் பாலி தீவுகளிலுள்ள எரிமலை சீற்றம் காரணமாக அங்குள்ள சர்வதேச விமான நிலையம் இரண்டாவது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது.
எரிமலை சீற்றம் காரணமாக வெளியேறும் புகை சுமார் மூன்று கிலோமீற்றர் வரை பரவியுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எரிமலைச் சீற்றம் மேலும் தீவிரமடையலாம் என்ற அச்சம் காரணமாக அது தொடர்பில் கடுமையான முன் எச்சரிக்கையை அதிகாரிகள் விடுத்திருந்தனர்.
எரிமலை சீற்றம் காணப்படும் பகுதியை சூழுலுள்ள ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எரிமலை சீற்றத்தால் வெளியேறும் புகை விமானத்தின் இன்ஜினை சேதமாக்கலாம் அல்லது செயலிழக்க செய்யலாம் என்பதை கருத்தில் கொண்டு விமான சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

No comments