டக்லஸ் தேவானந்தாவின் பாவமன்னிப்பை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 27, 2017

டக்லஸ் தேவானந்தாவின் பாவமன்னிப்பை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்
கடந்த அரசாங்கத் தரப்பினருடன் இணைந்து கொண்டு மக்களின் உணர்வுகளை மதிக்காது தேன்நிலவு கொண்டாடிய நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது பாவமன்னிப்புக் கோரிவருவதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

அவரின் பாவங்களை மன்னிக்க வேண்டுமா, இல்லையா? என்பது தொடர்பாக பொது மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 ஆவது பிறந்த நாள் நிகழ்வு, வல்வெட்டித்துறையில் உள்ள அவர் பிறந்த வீடு அமைந்திருந்த காணியின் முன்னால் (26) நடைபெற்றது. 

இதனையடுத்து, “மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்காக, பொதுமக்கள் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளில், அரசியல்வாதிகள் தமது சுய அரசியல் இலாபத்தின் பொருட்டு குளிர்காயக்கூடாது” என, டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார். 

அந்த கருத்துத் தொடர்பில், சிவாஜிலிங்கத்திடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் கருத்துரைத்த சிவாஜிலிங்கம், “கடந்த ஆட்சிக் காலத்தில், மஹிந்த ராஜபக்ஷவுடனும், பசில் ராஜபக்ஷவுடனும் பங்காளிகளாக இருந்துகொண்டு, அவர்களோடு தேன்நிலவு கொண்டாடிய டக்ளஸ் தேவானந்தா, அன்று மாவீரர் நினைவு தினத்தை அனுஷ்டிக்க வேண்டும் எனக் கூறவில்லை” என்று சுட்டிக்காட்டினார். 

(யாழ் நிருபர் பிரதீபன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages