Comments System

header ads

வேலை வழங்காப்படாவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக எச்சரிக்கை!



உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்பாக வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வழங்காப்படாவிட்டால் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை புறக்கணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வேலைவாய்ப்பை வழங்குவதாக பல தரப்பட்டவர்களால் வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதிலும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலைவாய்ப்பை வழங்குமாறு நீண்ட நாட்களாக தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்ட போதிலும் தமக்கான வேலை வாய்ப்பு தொடர்பில் எவ்வித தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்து வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வட இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது வடமாகாண ஆளுநரை போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இதனையடுத்து ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு ஆளுனர் ரெஜினோல்ட் கூரேயிடம் பட்டதாரிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன் ஜனாதிபதியின் சந்திப்பின் பின்னர் தாம் அடுத்த கட்டம் தொடர்பில் முடிவெடுக்கவுள்ளதாகவும் பட்டதாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
அரசாங்கத்தினால் 4 மாதங்களுக்கு முன்பு தேசிய மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் நியமனங்கள் வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும் தற்போது வரை எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் இதுதொடர்பில் பலமுறை கூறப்பட்ட போதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments