Comments System

header ads

புலிகள் இருந்த கோட்டைக்குள் இராணுவம் இருந்தால் என்ன? ஆளுனர் ஆவேசம்


யாழ் நகர்ப்பகுதியில் உள்ள இராணுவத்தினர் அனைவரையும் கோட்டைக்குள் நிலைகொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு வடமாகாண ஆளுநர் மகஜர் அனுப்பியுள்ளார்.
யாழ் நகர் பகுதிகளில் பொதுமக்களில் காணிகளில் உள்ள இராணுவத்தினரை யாழ் கோட்டைக்குள் அனுப்பி விட்டு பொதுமக்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைக்கலாம்.
கோட்டை தொல்பொருள் திணைக்களத்துக்குரியது அங்கு இராணுவத்தினர் நிலைகொள்ள முடியுமா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, கோட்டையில் புலிகள் இருந்தார்கள் கடந்த கால ஆங்கிலேய ஆட்சியாளர்கள், அரசர்கள் இருந்தார்கள் இராணுவத்தினர் இருப்பதில் என்ன பிரச்சனை வரப்போகிறது.
யுத்தம் முடிந்தாலும் சுத்தம் செய்வதற்கு தான் இராணுவத்தினர் உள்ளனர் என பதிலளித்தார்.

Post a Comment

0 Comments