நாளை நல்லாட்சிக்கு எதிராக ஹர்தாலுக்கு அழைப்பு - வட்டமடு காணி விவகாரம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:

STAY WITH US

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, November 26, 2017

நாளை நல்லாட்சிக்கு எதிராக ஹர்தாலுக்கு அழைப்பு - வட்டமடு காணி விவகாரம்
வட்டமடுக் காணி விவகாரம் சூடுபிடிப்பு; நாளை அக்கரைப்பற்றில் நல்லாட்சிக்கு எதிரான ஹர்த்தால் ..............................................

நாளை (திங்கட்கிழமை – 27/11/2017) அக்கரைப்பற்றில் அனுஷ்டிக்கப்படள்ளது. அக்கரைப்பற்று விவசாயிகளுக்குச் சொந்தமான, வட்டமடுப் பிரதேசத்தில் அமைந்துள்ள 1400 ஏக்கர் விவசாயக் காணிகளில் விவசாயம் செய்வதைத் தடுத்துவரும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராகவே இவ் ஹர்த்தால் நடாத்தப்படவுள்ளது.

வட்டமடுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இக்காணிகளில் அக்கரைப்பற்று DRO DIVISION ஆக இருந்த காலத்தில் 1968 ஆம் ஆண்டிலிருந்து விவசாயம் செய்யப்பட்டு வந்தது. அக்காணிகளுக்கு 1985 ஆம் ஆண்டில் காணி அனுமதிப் பத்திரமும் வழங்கப்பட்டிருந்தது. மகிந்த ராஜபக்ஷ காலத்தில் 2010 ஆண்டைய வர்த்தமானி அறிவித்தலினூடாகஇக்காணிகளைக் காடுகளாக அநியாயமாக பிரகடனம் செய்யப்பட்டது.

இருந்த போதிலும், அன்றைய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களின் விடாமுயற்சியால், கிழக்கு முதலமைச்சர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஆகியோரின் ஆதரவினால் விவசாயம் செய்வதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வந்தது. அவ்வாறு மகிந்த ராஜபக்ஷ காலத்தில் விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்ட இக்காணிகளில், நல்லாட்சி அரசாங்கம் அமைந்த பின்னர் விவசாயம் செய்யப்படுவதனில் இருந்து தடுக்கப்பட்டு வருகிறது.

எவ்வளவோ முயற்சிகளைச் செய்த போதிலும் இனவாத அதிகாரிகளினது தலையீடுகளாலும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினாலும் இக்காணிகளில் விவசாயம் செய்ய விடாமல் நல்லாட்சி அரசாங்கம் தடுத்து வருவதைக் கண்டித்தே நாளை (திங்கட்கிழமை) அக்கரைப்பற்றில்நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இதற்கு பொது நிறுவனங்கள் பல தமது ஆதரவுகளைத் தெரிவித்துள்ளனர். அத்தோடு ஏனைய பிரதேச விவசாயிகளும் ஹர்த்தாலுக்கு பூரண அனுசரணை வழங்க முன்வந்துள்ளன. நேற்றைய தினம் வர்த்தகர்களை விழிப்பூட்டு துண்டுப்பிரசுரம் வட்டமடு விவசாயிகளினால் விநியோகிக்கப்பட்ட போது அனைவரும் மனம் உவர்ந்து ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகத்தெரிவித்துள்ளனர் என அறியக்கிடைக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here