அகில இலங்கை போட்டிக்கு ஒலுவில் மதீனா தெரிவு ! - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 14, 2017

அகில இலங்கை போட்டிக்கு ஒலுவில் மதீனா தெரிவு !


-ஒலுவில் நிருபர்-

அகில இலங்கை மட்ட சிறுவர் மெய் வல்லுனர் விளையாட்டுப் போட்டிக்கு ஒலுவில் அல்-மதீனா வித்தியாலயம்  தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 2017.12.04ம் திகதி கண்டி பல்லேகல விளையாட்டு மைதானத்தில் தேசிய ரீதியாக நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுவதற்காக ஒலுவில் அல்-மதீனா வித்தியாலயத்திலிருந்து 12 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்னர். 

இவர்கள் தரம் - 03ம் ஆண்கள் பிரிவில் கயிறு அடித்தல், நின்று நீளம் பாய்தல், கட்டம் பாய்தல், தடைதாண்டல் ஓட்டம், முழங்காலில் நின்று பந்து வீசுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதற்காக இம்மாணவர்கள் செல்கின்றனர். 

இம்மாணவர்களுக்கான விஷேட பயிற்சிகளை அக்கரைப்பற்று வலய சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு இணைப்பதிகாரி ஏ.எல். பாயிஸ், எம்.ஜே.எம். அன்வர் ஆசிரியர் ஆகியோர்கள் வழங்கிவருகின்றனர். 

ஒலுவில் நிருபர் அமீர் - 0772984519

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages