Comments System

header ads

வெடித்தது எரிமலை - விமானப் போக்குவரத்திற்கு தடை!


இந்தோனேஷியாவின் பாலி தீவில் அமைந்துள்ள ‘மவுண்ட் அகுங்’ எனும் எரிமலை வெடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, குறித்த பகுதியில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாலி தீவில் அமைந்துள்ள மவுண்ட் அகுங் எரிமலையானது நேற்றைய தினம் மாலை நேரத்தில் வெடித்துள்ளது.
இதனால், சுமார் 1500 மீற்றர் உயரத்துக்கு கடுமையான புகை மற்றும் சாம்பல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக குறித்த பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் விமானப் போக்குவரத்துக்களும் இடை நிறுத்தப்பட்டுள்ளna.
மவுண்ட் அகுங் எரிமலை வெடிப்பதற்கான அறிகுறி கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து தென்பட்டு வந்த நிலையில், அம்மலைக்கு அருகில் வசிக்கும் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன், இவர்களில் சுமார் 25 ஆயிரம் பேர் தற்காலிக இடங்களில்  தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1963ஆம் ஆண்டு இந்த எரிமலை வெடித்தபோது, சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments