மு.கா வின் பலமான விக்கட் வீழ்கிறது. சாய்ந்தமருதில் நடந்தது என்ன ? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, November 25, 2017

மு.கா வின் பலமான விக்கட் வீழ்கிறது. சாய்ந்தமருதில் நடந்தது என்ன ?



- கல்முனை ஹாதீம் சாய்ந்தமருது இளைஞர்களால் தாக்குதல்
- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக புத்தகம் வெளியிடும் முயற்சியில் ஜவாத்
*********************************************************************************************
கிழக்குமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத், அவரின் தம்பி ஹாதீம், வபா பாறுக் ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக புத்தகம் வெளியிடும் முயற்சியில் சாய்ந்தமருதில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் சற்றுமுன்னர் சாய்ந்தமருது பள்ளிவாசல் பணிமனையில் இருந்த இளைஞர்களால் சுற்றிவளைக்கப்பட்டு தாக்குதல் மேற்கொண்டு குறித்த புத்தகத்தையும் கைப்பற்றியுள்ளனர். 

சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள வி.சி லேனில் அமைந்துள்ள வபா பாறுக்கின் தம்பி முசம்மிலின் வீட்டில் மேற்படி நபர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக வெளியிடப்படவுள்ள புத்தகத்தை இன்று 24-11-2017 வெள்ளிக்கிழமை திருத்தம் பார்த்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சாய்ந்தமருது பள்ளிவாசல் பணிமனையில் இருந்த இளைஞர்களால் கிழக்குமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத், அவரின் தம்பி ஹாதீம், வபா பாறுக் ஆகியோர் குறித்த வீட்டில் இருப்பதை அறிந்து, கல்முனையைச் சேர்ந்தவர்கள் இங்கு என்ன செய்கிரார்கள் என்று கூறி சாய்ந்தமருது பள்ளிவாசல் பணிமனை இளைஞர்கள் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போதே அப்புத்தகம் வெளியிடப்பட இருந்தமை தெரியவந்துள்ளது.

இச்சுற்றிவளைப்பின்போது முதலில் வெளியே வந்த அப்துல்லாவை இவ்விளைஞர்கள் பாரதூரமாக தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான அவர் வெளியேறிச் சென்றுள்ளார். ஆனால் குளியலறையில் ஒழிந்திருந்த ஜவாத் விஷேட அதிரடிப்படையினரின் வருகையின் பின்னரே அவர்களின் பாதுகாப்பில் வெளியேறிச் சென்றார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்துகொண்டே அதற்கெதிராக சதி செய்தமை இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages