முஸ்லீம் காங்கிரசின் சார்பில் எதைப்பெறவும் எமக்கு உரிமை இருக்கிறது ; ஸ்தாபக செயலாளர் எஸ்.எம்.ஏ.கபூர்(நான்)களும் பொறுமையுடன்தான் இன்னும் பொருத்திருக்கின்றோம்.
==============================

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பெயர் தொடர்பாகவும் அதன் தலைவராக இருந்து மறைந்த மாமனிதர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் பற்றியும் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் இந்நாள் அமைச்சருமான திரு. பி.திகாம்பரம் அவர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்திற்கு எனது மறுப்பு அறிக்கையொன்று அப்போதைய தினகரன் வாரமஞ்சரியில் முன்பக்க செய்தியாக (03.12.2006) இல் வெளிவந்திருந்தது. 

இதனை முற்றும் முழுதாக வாசித்துப் பாருங்கள் இதில் இக்கட்சிக்கான பெயரை (நான்)கள் எப்படி தெரிவு செய்து எவ்வாறு அப்பெயர் சூட்டப்பட்டது என்பது சம்மந்தமான வரலாறு பத்திரிகை மூலம் பகிரங்கமாக பல வருடங்களுக்கு முன்பு அதன் உண்மையை உரிமையுடன் இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. இதனை  முகநூலின் முக்கியஸ்தர்கள் முக்கியமாக வாசித்து விளங்குமாறு வேண்டிக்கொள்கிறேன். அதேவேளையில் இன்றையவர்ளில் சிலர் தங்கள் முகங்களை காட்டி முந்தியடித்துக்கொண்டு மு.கா வின் முன்வரிசை முன்னணி உறுப்பினர்களாக அவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

இவர்களுக்கெல்லாம் இவைகள் பற்றி தெரியுமா? அல்லது எங்களின் பாரிய பங்களிப்புக்களின் பாரங்கள் தான் விளங்குமா? என்பதை மிகத் தாழ்மையுடன் "அவர்களுக்கும்" “இவர்களுக்கும்” ஆவணங்கள் மூலம்  ஆதாரபூர்வமாக விளங்கப்படுத்தி வைக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எங்களுக்கும் உண்டு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

இக்கட்சியை ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அதனை  கட்டி பாதுகாத்து பலரை பல வழிகளிலும் வளர்த்து வந்தவர்கள் என்பதனால் (நான்)களும் எங்களுக்கு பொருத்தமான ஒரு நியமனத்தை எதிர்பார்த்து அதனை அடைவதற்கும் , பெறுவதற்குமான  உரித்தும் உரிமையும் உண்டு என்ற நம்பிக்கையுடன் இன்னும் நாம் பொறுமையுடன்தான் பொருத்திருக்கின்றோம். #அல்ஹம்துலில்லாஹ்.

Post a Comment

0 Comments