பிரபாகரன் வழியில் அதாவுல்லா; பிரபாகரன் அழிந்துவிட்டார் !!! - ஏ.எல்.தவம் மு.மா.ச.உ - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, November 12, 2017

பிரபாகரன் வழியில் அதாவுல்லா; பிரபாகரன் அழிந்துவிட்டார் !!! - ஏ.எல்.தவம் மு.மா.ச.உ

ஆனானப்பட்ட மகிந்தராஜபக்ச மூன்றில் ஒரு பங்கு சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களைக் கையில் வைத்துக்கொண்டு மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் தடுக்க எவ்வளவோ முயற்சிகளைச் செய்தும் முடியாமல் போய். மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அது நிறைவேற்றபட்டாகி விட்டது.

அவ்வாறு நிறைவேற்றப்பட்ட திருத்தச்சட்டத்திற்கமைவாக தற்போது மாகாண சபை தேர்தல் தொகுதிகள் அமைக்கப்படுவதற்கான எல்லை நிர்ணயக் குழு நியமிக்கப்பட்டு அதன் கடமைகளைச் செய்து கொண்டிருக்கிறது. அவ்வாறு உருவாக்கப்படும் தொகுதிகளுக்கான முன்மொழிவுகளை வேண்டி கடைசி தேதியாக கடந்த 02.11.2017 ஆம் திகதி எனக்கூறப்பட்டது. பின்னர் இன்னும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டு 10.11.2017ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

பல பொது நிறுவனங்களும் தனிநபர்களும் கட்சிகளும் தமது முன்மொழிவுகளைச் சமர்ப்பித்திருந்தனர். அதன்பின்னரே அம்பாறைக்கு கடந்த 11.11.2017 ஆம் திகதி நேரடியாக மக்கள் அபிப்பிராயம் பெறும் பொருட்டு எல்லை நிர்ணயக்குழு வந்திருந்தது.

இவ்வாறான நிலையில், அதாவுல்லா அணியினர் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தை தாங்கள் புறக்கணிப்பதாக அல்லது தடுப்பதாக இருந்தால் கொழும்பிற்குச் சென்று அங்கு மக்களைக் கூட்டியும், கிழக்கிலிருந்து மக்களைத் தருவித்தும், ஆர்ப்பாட்டங்களைச் செய்து அரசாங்கத்தைக் கீழ்படியச் செய்து, அத்திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படாமல் தடுத்திருக்க வேண்டும்.

அதனை விடுத்து மகிந்தராஜபக்சவுடனான கள்ள உறவை வைத்துக்கொண்டு, மாகாண சபைகள் திருத்தச் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் மகிந்தவின் நிகழ்ச்சி நிரலுக்கு தாளம் போடும் நோக்கில், அதாவுல்லா அக்கரைப்பற்றை ஒரே தொகுதிக்குள் கொண்டுவருவதற்கான எந்த முன்மொழிவையும் முன்வைக்காமல் விட்டிருப்பது அக்கரைப்பற்றிற்கு செய்த மிகப்பெரும் துரோகமாகும்.

அதாவுல்லாவின் கட்சியில் பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது மாகாண சபை உறுப்பினரோ அல்லது ஆகக்குறைந்தது ஒரு பிரதேச சபை உறுப்பினரோ இல்லாத நிலையில், அவர் மாகாண சபைத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதால் என்ன நடந்துவிடப்போகிறது? “பெட்டைக்கோழி கூவிப் பொழுது விடியுமா’? என்பதைப் போன்ற விடயமில்லையா இது.

அக்கரைப்பற்றில் உள்ள தனது ஆதரவாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதைத் தவிர, இவ்வாறு எதிர்ப்பதாகக் கூறி அக்கரைப்பற்றை ஒரே தொகுதியின் கீழ் கொண்டுவருவதற்குக் கிடைத்த பொன்னான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாமல் விட்டது அக்கரைப்பற்றிற்குச் செய்த துரோகமன்றி வேறு என்ன?
அக்கரைப்பற்றை உண்மைக்கு உண்மையாக நேசித்தால், மகிந்தவினதும் வெளிநாட்டுச் சக்திகளினதும் கைப்பொம்மையாக இந்த விடயத்தில் மட்டும் ஆடாமல் ஏன் விலகிக்கொள்ள முடியாது போயிட்டு? விலகி அக்கரைப்பற்றை ஒன்று சேர்ப்பதற்கான முன்மொழிவுகளைச் செய்யவும் அதற்கான முன்னெடுப்புக்களைச் செய்யவும் ஏன் முடியாது போயிட்டு? இது அக்கரைப்பற்று மக்களுக்குச் செய்த துரோகமன்றி வேறென்ன?

விடுதலைப் புலிகள் 2001 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற அரசியலைப் புறக்கணித்துத் தமிழ் மக்களை நட்டாற்றில் விட்ட வழியை அதாவுல்லாவும் பின்பற்றுகிறாரா? தமிழ் மக்கள் அனுபவித்த சொல்லொண்ணாத் துன்பங்களைப் போன்று, அதாவுல்லாவும் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொகுதி நிர்ணயத்தை நிராகரித்து அக்கரைப்பற்று மக்கள் தமது ஊரை ஒரே தொகுதியின் கீழ்க்கொண்டு வருவதற்கான சந்தர்ப்பத்தை இழந்து துன்பமடையச் சொல்கிறாரா?

ஓரு சமூகம் அல்லது நாடு அல்லது இயக்கம் அல்லது கிராமம் அழிந்தாலும் பரவாயில்லை, தான் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டுமென நினைப்பது பாசிஷம். அதைத்தான் பிரபாகரன் செய்தார். அதனால் தமிழ் மக்களது அபிலாஷைகள் இழப்புக்களை மட்டுமே சந்தித்து நிற்கின்றன.

அதேபாணியில் அதாவுல்லா இப்போது நடந்து கொள்கிறார். அக்கரைப்பற்று மக்களின் இரண்டு தொகுதிகளுக்குள் பிரிந்திருக்கும் தமது ஊரை ஒன்று சேர்க்க வேண்டுமென்ற, 40 வருட கால அபிலாஷை நிறைவேறாமல் போனாலும் பரவாயில்லை, நான் நினைப்பதை மட்டுமே செய்வேன் என்று செயற்படுகிறார்.

அவர் ஒன்றை மறந்து விட்டார். அதாவது, அழிந்தது தமிழ் மக்கள் மட்டுமல்ல பிரபாகரனும்தான். அந்த முடிவுக்கான நாளை அதாவுல்லா இனி எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages